208பொருளியல்

மனையறத்தொடு   படுதலை   விரும்பி  நிற்கும்  நிலையாம். இதற்குக்
கருத்துப்   பொருள்   களவொழுக்கத்தை   முறையாக   வெளிப்படுத்தல்
என்பதாகும்.  இதனைச்   சொற்பொருளாகக்   கருதி  விளக்கங்  கூறுவர்
உரையாசிரியன்மார்.   அங்ஙனம்    தலைவியது   கருத்தினை  யுணர்ந்த
தோழி   செவிலிக்குக்   குறிப்பான்   உணர்த்தலும்,  செவிலி  நற்றாய்க்கு
வெளிப்படையாக   உணர்த்தலும்   நற்றாய்  தன்  தமர்க்கு  உரைத்தலும்
அறத்தொடு நிலையாயின. (அறம் = இல்லறம்)
 

எ - டு :

மேல் வரும் சூத்திர உரையுள் கண்டு கொள்க.
 
சூ. 208 :

எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல்

கூறுத லுசாதல் ஏதீடு தலைப்பாடு

உண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ

அவ்எழு வகைய என்மனார் புலவர்

(12)
 

க - து :

தோழி   அறத்தொடு   நிற்கும்   நிலைமை   ஏழுவகையாக
அமையும் என்கின்றது.
 

பொருள் : (1) பெருமையும்  உரனுமுடையவனாகிய தலைவன், தலைவி
மாட்டுப்   பணிந்தொழுகும்  இயல்பினன்  என  அவனை  எளியவனாகக்
கூறுதலும்.  (2) செல்வம்   முதலியவற்றான்   பிறரினும்   மிக்கோன்  என
அவனை     உயர்த்திக்கூறலும்   (3) தலைவனும்   தலைவியும்   ஒருவர்
ஒருவர்பால்   கொண்டுள்ள  தணியா  விருப்பத்தைக்  கிளந்து  கூறுதலும்
(4) வெளியாட்டு   முதலியவை   நிகழுமிடத்துச்   செப்பும்  வினாவுமாகக்
களவொழுக்கத்தைக்    குறிப்பாற்கூறலும் (5) களவு  நிகழ்ந்தமைக்குச்  சில
காரணங்களை எடுத்துக்காட்டிக் கூறலும் (6) உயர்ந்த  பாலது ஆணையான்
அவர்தாமே தலைப்பட்டனர்  எனக்கூறலும்  (7) அங்ஙனம்   புனைந்துரை
வகையாற்  கூறலேயன்றிப் பட்டாங்குக்  கூறலும் என்பதொடு கூடித் தோழி
அறத்தொடு நிற்றல் அவ் ஏழுவகையின எனக் கூறுவர் நூலோர்.
 

உண்மை செப்புங்கிளவி பட்டாங்குக்  கூறல் ஆகலின் பிரித்தோதினார்.
அதனான் ஏனையவை குறிப்பாற் கூறப்படுபவை என்பது புலப்படும்.
 

எ - டு :

'அன்னை யறியினும் அறிக' என்னும் அகப்பாட்டினுள்

(110)
 

சிற்றில் இழைத்தும் சிறுசோறு குவைஇயும்

வருந்திய வருத்தம் தீர யாம்சிறிது

இருந்தன மாக எய்த வந்து