| | தடமென் பணைத்தோள் மடநல் லீரே எல்லும் எல்லின்று அசைவுமிக உடையேன் மெல்லிலைப் பரப்பின் விருந்துண்டு யானும்இக் கல்லென் சிறுகுடி தங்கின் மற்றெவனோ எனமொழிந் தனனே" |
என்பது எளித்தல் பற்றி வந்தது. |
| 'அன்னாய் வாழி வேண்டன்னை' என்னும் அகப்பாட்டினுள் நின்மகள் உண்கண் பண்மாண் நோக்கிச் சென்றோன் மன்றஅக் குன்றுகிழ வோனே பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்து அவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன் மகனே தோழி என்றனள் அதனளவு உண்டுகோள் மதிவல் லோர்க்கே | (48) |
என்பது ஏத்தல் பற்றி வந்தது. |
| காமர் கடும்புனல் என்னும் குறிஞ்சிக்கலியுள் "பூணாகம் உறத்தழீஇப் போத்தந்தான் அகனகலம் வருமுலை புணர்ந்தன என்பதனான் என்தோழி அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே" | (39) |
என்பது வேட்கையுரைத்தல் பற்றி வந்தது. |
| முருகயர்ந்து வந்த முதுவாய் வேல சினவல் ஓம்புமதி வினவுத லுடையேன் பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய விண்டோய் மாமலைச் சிலம்பன் ஒண்டா ரகலமும் உண்ணுமோ பலியே | |
| (குறு-362) |
என்பது கூறுதற்கண் உசாதல் பற்றி வந்தது. |
| | அன்னாய் வாழிவேண் டன்னை என்னை தானும் மலைந்தான் எமக்குந்தழை யாயின பொன்வீ மணியரும்பினவே என்ன மரங்கொலவர் சார லவ்வே | |
(ஐங்-201) |
என்பது தழை தந்தான் என்னும் ஏதீடு பற்றி வந்தது. |
| சுள்ளி சுனைநீலம் சோபாலிகை செயலை அள்ளி அலகத்தின் மேலாய்ந்து - தெள்ளி இதணாற் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை உதணாற் கடிந்தான் உளன் | |
| (திணை-நூற்-2) |