210பொருளியல்

என்பது களிற்றினான் வந்த ஏதங் காத்தான் என்னும் ஏதீடு பற்றி வந்தது.
 

அவரை அருந்த மந்தி பகர்வர்

பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்

பசுப்போல் பெண்டிரும் பெறுகுவன்

தொல்கேள் ஆகலின் நல்குமல் இவட்கே

(ஐங்-271)
 

என்பது பாலதாணையான் தலைப்பட்டமை பற்றி வந்தது.
 

கன்மழை பொழிந்த அதன்கண் அருவி

ஆடுகழை யடுக்கத்து இழிதரும் நாடன்

பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு

முயங்காது கழிந்த நாள்இவள்

மயங்கிதழ் உண்கண் கலுழும் அன்னாய்

(ஐங்-220)
 

என்பது உண்மை செப்பல் பற்றி வந்தது.
 

அறத்தொடு நிற்றற்கண் இவ்வகைமை  ஏழும் தனித்தனியேயும் தம்முள்
கலந்தும் வருமெனக் கொள்க.
 

சூ. 209 :

உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின்

அப்பொருள் வேட்கைக் கிழவியின் உணர்ப

(13)
 

க - து :

களவொழுக்கமாகிய பொருள் புலப்பாடு அதிகாரப்பட்டமையான்
தலைவியது  களவினை  ஓராற்றான் அறிந்தல்லது இற்செறிப்பும்,
வெறியாட்டெடுத்தலும்        பிறவும்       நிகழ்த்தாராதலின்
தோழியையின்றித் தாயர்  தாமேயும் உணர்வர் என்பதும் அவர்
உணருமாறும் பற்றிக் கூறுகின்றது.
 

பொருள் : வெறியாட்டெடுத்தல்  முதலாக  யாதானும்  ஓர் இடையூறு
நிகழும் வழியல்லது அறத்தொடு நிலை வகையான் தன்னிலையைத் தலைவி
கூறல் மரபன்மையான் களவின்வழி யொழுகும் அவள் விருப்பத்தை அவள்
ஒழுகுமாற்றான் செவிலியும் நற்றாயும் உணர்ந்து கொள்வர்.
 

இச்சூத்திரம்     அறத்தொடு     நிலை      வகையான்      தோழி
உணர்த்தாதவிடத்துச்    செவிலியும்    நற்றாயும்    கட்டும்,    கழங்கும்
காணுதல்,   வெறியாட்டெடுத்தல்   முதலியவை   நிகழ்த்துமாறு யாங்ஙனம்
என்னும் ஐயத்தை உட்கொண்டு  தோழி உணர்த்தா வழியும்  தலைவியினது
மேனி வேறுபாட்டானும் பிற நிலைமைகளானும் உணர்ந்து கொள்வர் எனத்
தாயர் தம் ஆய்வறிவையும் பொறுப்புணர்வையும் சுட்டி உணர்த்துகின்றது.