212பொருளியல்

பொருள் :களவொழுக்கத்தின்கண் தலைவன் இருவகைக் குறியிடத்தும்
தலைவியைக்  கருதி  வருங்கால்  நிகழும்  பொழுதும் வருகின்ற  வழியும்
ஊர்க்கண்    அமைந்துள்ள   காவலும்   என்று   சொல்லப்  பெற்றவை
வழுவுமாயின்  நேர்வதாகிய தீமையினைத்  தோழி எடுத்துச் சொல்லுதலும்,
தான் மனனழிந்துரைத்தலும் தலைவற்குண்டாகும் இடையூறுகளுக்கு அஞ்சி
மொழிதலும் இரவுக்குறிக்கண்ணும் பகற்குறிக் கண்ணும் நீ வருக என நியதி
இன்றிக்  கூறலும்   குறியிடத்திற்கு   வாரற்க   என   விலக்கிக் கூறலும்,
நன்மையையும், தீமையையும்  பிறிது  பொருளினைச்  சார்த்தித்  தலைவன்
குறிப்பான்  உணருமாறு  கூறலும், என இங்ஙனம் தன் உயர்வு  தோன்றக்
கூறவந்தனவும்    அவை  போல்வன  பிறவும்   தலைவியைத்  தலைவன்
வரைந்துகோடலை வற்புறுத்தும் தன் விருப்பத்தினைப் பொருளாகவுடையன
எனக் கூறுவர் நூலோர்.
 

வரைதலை  வற்புறுத்தும் வேட்கையினைத் தோழி  தன்னைத் தலைமை
செய்து கொண்டு  கூறுதலின்  'புரைபட வந்த'  என்றார்.  புரை = உயர்பு.
படுதல் = தோன்றுதல்.
 

தலைவன்   வரையாது  ஒழுகுதலை முனிந்து   அன்பிலை, கொடியை,
அலராயிற்று   என்றலும்,   நொதுமலர்வரைவு   வேண்டினர்   என்றலும்,
வெறியாட்டெடுத்தனர்  என்றலும்  பிறவும்  எல்லாம் அடங்க  அன்னவை
பிறவும்  என்றார். இவை  யாவும்  வரைதலை விரும்பும்  குறிப்புடையவை
என்பது விளங்கப் 'பொருள' என்றார்.
 

எ - டு :

மன்று பாடவிந்து மனைமடிந் தன்றே

கொன்றோ ரன்ன கொடுமையொடு இன்றே

யாமங் கொளவரின் .... எவன்கொல் வாழிதோழி

(அக-128)
 

என்பது பொழுது வழுவுதலின் குற்றம் காட்டியது.
 

ஈர்ந்தண் ஆடையை எல்லி மாலையை

சோர்ந்துவீழ் கதுப்பினாள் செய்குறி நீவரின்

ஒளிதிகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர்

களிறுஎன ஆர்ப்பவர் ஏனல் காவலரே  

(கலி-52)
 

என்பது காப்பினான் ஆகிய குற்றங்காட்டியது.
 

'இருள் கிழிப்பதுபோல்' என்னும் அகப்பாட்டினுள்(72)

"உள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி

அருள்புரி நெஞ்சமொடு எஃகுதுணை யாக

வந்தோன் கொடியனு மல்லன் தந்த