பொருளியல்213

நீதவறு டையையும் அல்லை நின்வயின்

ஆனா அரும்படர் செய்த

யானே தோழி தவறுடை யேனே"
 

என்பது தன்னையழிந்து கூறியது.
 

அஞ்சுவல் வாழி ஐய ஆரிருட்

கொங்கியர் ஈன்ற மைந்தின்

வெஞ்சின உழுவை திரிதரும் காடே

(நச்-மேற்)
 

என்பது வழியிடத்துள்ள ஏதமஞ்சியது.
 

"வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாது

சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ

பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை

அன்றில் அகவும் ஆங்கண்

சிறுகுரல் நெய்தல் எம்பெருங்கழி நாட்டே" 

(அக-120)
 

என்பது பகற்குறி கூறியது.
 

"இரவின் வாரல் ஐய விரவுவீ

அகலறை வரிக்கும் சாரல்"

(கலி-49)
 

என்பது இரவின்கண் வாரற்க என்றது.
 

மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து

இயல்முருகு ஒப்பினை வயநாய் பிற்பட

பகல்வரின் கௌவை யஞ்சுதும்"

(அக-118)
 

என்பது பகலின்கண் வாரற்க என்றது.
 

யாயே கண்ணினும் கடுங் காதலளே

எந்தையும் நிலனுறப் பொறாஅன்

..... ...... ...... ...... ...... ....... ....... ....... ...... ....... .......

நல்வரை தாட நீவரின்

மெல்லியல் ஓரும் தான்வா ழலளே

(அக-12)
 

என்பது இரவினும் பகலினும் வாரற்க என்றது.
 

  

"கூனல் எண்கின்" என்னும் அகப்பாட்டினுள்

(112)

நாள்இடைப் படின்என் தோழி வாழாள்

தோளிடை முயக்கம் நீயும் வெய்யை