கழியக் காதலர் ஆயினும் சான்றோர் |
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார். |
என்றது நன்மையும் தீமையும் பிறிதின் மேல் வைத்துக் கூறியது. |
ததும்புசீர் இன்னியம் கறங்கக் கைதொழுது |
உருகெழு சிறப்பின் முருகுமனைத் தரீஇக் |
கடம்பும் களிறும் பாடித் தொடங்குபு |
தோடும் தொடலையும் கைக்கொண்டு அல்கலும் |
ஆடினர் ஆதல் நன்றோ |
(அக-138) |
என்பது வெறியாட்டுணர்த்தியது. பிறவும் சான்றோர் செய்யுள்களுட் கண்டு கொள்க. |
| சூ. 212 : | வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தல் |
| மரீஇய மருங்கின் உரித்தென மொழிப |
(16) |
க - து : | மேலதற்கொரு புறனடை கூறுகின்றது. |
பொருள் : பொழுதும் ஆறும் வழுவிய குற்றங்காட்டல் முதலாகிய ஏதுக்களான் வரைதல் வேட்கையைக் குறிப்பாற் புலப்படுத்தலேயன்றிக் களவு நீட்டித்தலைக் கருதாது ஒழுகும் தலைவனது வேட்கையை மறுத்து வெளிப்படையாகக் கிளந்து உள்ளவாறு கூறுதலும் வழக்கின்கண் பொருந்திய பக்கத்தான் தோழிக்குரியது எனக் கூறுவர் புலவர். |
| எ - டு : | கொடிச்சி இன்குரல் கிளிசெத்து அடுக்கத்துப் |
| பைங்குரல் ஏனற் படர்தரும் கிளியெனக் |
| காவலும் கடியுநர் போல்வர் |
| மால்வரை நாட வரைந்தனை கொண்மே |
(ஐங்-289) |
இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் வலிந்துரை கைக்கிளை, பெருந்திணை கட்குக் கூறிய இலக்கணச் சூத்திரங்களானே பெறப்படும். பொருளியலுட் கூறத்தக்க குறிப்பியைபு யாதுமின்மையின் அவர் கருத்துப் பொருந்தாமை தெளிவாம். |
| சூ. 213 : | தேரும் யானையும் குதிரையும் பிறவும் |
| ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப |
(17) |
க - து : | தலைவர்க்குரியதோர் மரபு கூறுகின்றது. |
பொருள் :களவின்கண் குறியிடத்துக்குச் செல்லும் தலைவர் தத்தம் நிலைமைக்கேற்பத் தேரையும் யானையையும் குதிரையையும் பிற ஊர்திகளையும் ஊர்ந்து சேறலும் உரியர் எனக் கூறுவர் புலவர். |