தத்தம் தகுதிகட்கு ஏற்பச் செல்லாமையும் பிறர் ஐயத்திற்கு ஏதுவாம் ஆதலின் 'இயங்கலும் உரியர்' என்றார். உம்மையான் ஊர்தியின்றிச் சேறலே பெருபான்மை எனக் கொள்க. பிறவாவன வையமும், அத்திரி முதலாயினவுமாம். |
| எ - டு : | கடிகொண் டனளே தோழி பெருந்துறை |
| எல்லையும் இரவும் என்னாது கல்லென |
| வலவன் ஆய்ந்த வண்பரி |
| நிலவுமணல் கொட்குமோர் தேருண்டு எனவே |
(அக-20) |
| கடுமான் பரிய கதழ்பரி கடைஇ |
| நடுநாள் வரூஉம் |
(நற்-149) |
இவை தேரும் பரியும் ஊர்ந்து வந்தமை கூறின. |
| கழிச்சுறா எறிந்த புட்டாள் அத்திரி |
| நெடுநீ ரிருங்கரிப் பரிமெலிந் தசைஇ |
(அக-120) |
என்பது அத்திரியூர்ந்து வந்தமை கூறிற்று. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. |
இதன்கண் பொருளியற்குச் சிறந்த குறிப்பமைதி இல்லையாயினும் தோழி எளித்தல், ஏத்தல் முதலிய வகையான் அறத்தொடு நிற்றற்கண் கூறப்படும் தலைவனது சிறப்புப் புலப்படுமாதலின் இதனை ஈண்டு வைத்தார் என்க. |
| சூ. 214 : | உண்டற் குரிய வல்லாப் பொருளை |
| உண்டன போலக் கூறலும் மரபே |
(18) |
க - து : அகத்திணை மாந்தர் கூற்றினுள் இசை திரிந்திசைக்கும் ஒருசார் சொற்பொருண்மை கூறுகின்றது. |
பொருள்: உண்டல் - தின்றல் முதலிய தொழில்களை நிகழ்த்துதற்குரிய வல்லாத பொருள்கள் உண்டல் முதலாய தொழில்களைப் புரிவனபோலக் கூறலும் அகவொழுகலாற்றின்கண் மரபாகும். |
எ - டு : | பசலையால் உணப்பட்டுப் பண்டை நீரொழிந்தக்கால் |
(கலி-15) |
எனவரும். |
| கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் |
| தின்னும் அவர்க்காண லுற்று |
(குறள்-1244) |
என்பதுமது. |