பொருந்தி வருதலான் அவ்வழக்கினது நெறியிலே நடத்தல் செய்யுட்குக் கடப்பாடாகும். |
என்றது : அவவக்காலத்தின்கண் சான்றோரான் வழங்கப் பெறும் சொற்கள் தொன்று தொட்டன அல்லவெனக் கருதாமல் மேற்கொள்ளல் வேண்டுமெனச் சொல்லதிகாரத்துள் ''கடிசொல் லில்லைக் காலத்துப் படினே'' (எச்-56) என விதித்தாங்கு இப்பொருளதிகாரத்துள் களவு கற்பிற்கு அவ்வவ்வியல்களுள் ஓதிய விதிகளேயன்றி அவ்வக்காலத்து உயர்ந்தோர் வழக்காகி வந்து பொருந்துவனவும் கடியப்படா என்றவாறு. |
அவையாவன முல்லைக் கலியுள் ஏறுதழுவுதல் பற்றிவரும் கிளவிகளும் கூற்றுகளும் அகப்பொருட்கோவை நூலார் வகுத்துக்கூறும் ஒருசார் கூற்றுக்களும் பிறவுமாம். |
| சூ. 219 : | அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின் |
| வழக்கென வழங்கலும் பழித்தன்று என்ப |
(23) |
க - து : | உலகவழக்கிற்கு ஒவ்வாதனவும் நாடகவழக்குப் பற்றிவரின் வழுவாகா என்கின்றது. |
பொருள் : பிறப்பும் குடிமையும் பற்றிய அறநெறிகட்கு ஒவ்வாதவை என உலகவழக்கின்கண் நீக்கப் பெறுபவை அகப்பொருட் காட்சிக்குப் பயன்படவருமாயின் அவை நாடக வழக்குப்பற்றியனவாம் எனக்கொண்டு புலனெறி வழக்கஞ் செய்தலும் வழுவுடையதன்று எனக்கூறுவர் புலவர். |
அறக்கழிவுடையன என்றதனான் அவை இன்பத்திற் கழிவுடையன அல்ல என்பதும் பொருட்பயம் படவரின் என்றதனான் அவை நாடகவழக்கு என்பதும் புலப்படும். அவையாவன : |
"கயமலர் உண்கண்ணாய்" என்னும் குறிஞ்சிக்கலியுள் | (37) |
"இனக்கிளி யாம்கடிந் தோம்பும் புனத்தயல் | |
ஊசலூர்ந் தாட ஒருஞான்று வந்தானை | |
ஐய சிறிதென்னை ஊக்கி எனக்கூறத் | |
தையால் நன்றென்று அவன்ஊக்கக் கைநெகிழ்பு | |
பொய்யாக வீழ்ந்தேன் அவன்மார்பின் வாயாச்செத்து | |
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்" | |
என்றாற்போலத் தோழி கூற்றாக வருவனவும், |
புலர்குரல் ஏனற் புழையுடை யொருசிறை |
மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர் |