226பொருளியல்

ஈரஞ் சேரா இயல்பிற் பொய்ம்மொழிச்

சேரியம் பெண்டிர் கௌவையும் ஒழிதும்

நாடுகண் அகற்றிய உதியஞ் சேரற்

பாடிச் சென்ற பரிசிலர் போல

உவவினி வாழி தோழி அவரே

பொம்மல் ஓதி நம்மொடு ஓராங்குச்

செலவயர்ந் தனரால் இன்றே"

(அக-65)
 

என்பது உடன்போக்கிற்கு உடன்பட்டமை கூறிற்று.
 

"ஊர்அலர் எழச் சேரிக்'கல்'லென

ஆனாது அலைக்கும் அறனில் அன்னை

தானே இருக்க தன்மனை, யானே

நெல்லிதின்ற முள்ளெயிறு தயங்க

உணல் ஆய்ந்திசினால் அவரொடு"
 

என்பது இடையூறு பொருளின்கட் போக்குடன் பட்டமை கூறிற்று.
 

ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர்

தமியர் உறங்குங் கௌவை யின்றாய்

இனியது கேட்டின் புறகவிவ் வூரே

முனாதுயானையங் குருகின் கானலம் பெருந்தோடு

அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்

குட்டுவன் மாந்தை யன்னஎம்

குழல்விளங் காய்நுதற் கிழவனும் அவனே

(குறு-34)
 

இஃது உடன் சென்று வரையக் கருதுதல் கூறிற்று.
 

சூ. 227 :

வருத்த மிகுதி சுட்டுங் காலை

உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம்

(31)
 

க - து : 

இருவகைக் கைகோளினும் தலைமக்கட்குரியதொரு பொருண்மை
கூறுகின்றது.
 

பொருள்:  களவின்கண்   கூட்டத்திற்கு   இடையூறாக    அமையும்
இற்செறிப்புத் தலைவன் வருந்தொழிற்கருமை, அல்லகுறி முதலியவற்றானும்,
கற்பின்கண்  பரத்தையிற்பிரிவு, உணர்த்த உணரா ஊடல் முதலியவற்றானும்
எய்தும் வருத்தம் கைகடந்து  போதலைக் கருதுமிடத்து  உயிரொடு வாழும்
வாழ்க்கையின்கண் அவலமுற்றுக் கூறும் கூற்றுத் தலைமக்கட்கு உரித்தெனக்
கூறுவர் நூலோர்.
 

எ - டு :

தொய்யில் துறந்தார் அவர்எனத் தம்வயின்

நொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு

யோயின்று சொல்என் உயிர்

(கலி-24)