228பொருளியல்
சூ. 229 :

நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற்

புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே

(33)
 

க - து :

இதுவுமது.
 

பொருள் :  கற்பொழுக்கத்து  நிகழும்  புலவித்தகவின்கண்  தலைவன்
தாழ்ந்து    பணிந்தொழுகுதலேயன்றித்    தன்   வேட்கை    மிகுதியான்
தலைவியது  வனப்பினைப்   புனைந்து  ஏத்துதலை   நூலோர்   நீக்காது
கொள்வர்.
 

நிகழ்தகை   என்றது மேற்கூறிய  புலவிக்காலத்து நிலையினை. பணிந்த
கிளவியே (கற்-13)யன்றிப் புகழ்ந்துரைத்தலும் பொருளியல் மரபு என்றவாறு.
 

"தடமருப் பெருமை" என்னும் நற்றிணையுள்

(120)

புகையுண் டமர்த்த கண்ணள் தகைபெறப்

பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்

அம்துகில் தலையில் துடையினள் நுப்புலந்து

அட்டி லோளே அம்மா அரிவை"
 

எனப் புகழ்ந்து தலைவன் தன்னெஞ்சிற்குக் கூறியவாறு காண்க.
 

சூ. 230 :

இறைச்சி தானே உரிப்புறத் ததுவே
(34)
 

க - து :

அகத்திணை    மாந்தர்    கூற்றினுள்     உள்ளுறைப்பொருள்
பயப்பனவாகப்   பின்னர்  ஓதப்பெறும்   ஐந்தனுள் 'உடனுறை'
எனப்படும் இறைச்சியினது இலக்கணங் கூறுகின்றது.
 

பொருள் :நிலத்துவழி மருங்கிற் றோன்றும்  (பெய - 42) அஃறிணைப்
பொருள்களைப்  பற்றிவரும்  இறைச்சி  என்னும்  உள்ளுறையாவது மக்கள்
நுதலிய அகனைந்திணை ஒழுகலாறாகிய உரிப்பொருளின் புறத்ததாகும்.
 

என்றது  :  இறைச்சியாவது   மக்களும்   தெய்வமுமல்லாத   ஏனைய
கருப்பொருள்களின்  செயலும்   பண்புமாகிய   நடக்கை   பற்றி   வரும்
என்றவாறு.
 

பெயரியலுள்  இயற்பெயர்  பற்றிய   இலக்கணமரபுகளைக்  கூறுமிடத்து
இயைபும் விளக்கமும் கருதி ஆசிரியர்,
 

''இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுட் கிளக்கும்

இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா

நிலத்துவழி மருங்கிற் றோன்ற லான''

(பெய-42)