230பொருளியல்

எனக்   கூறினார்.  ஏனை  உவமப்போலியை  உவமவியலுடன்  கூறினார்.
அந்நெறியே பற்றி உள்ளுறை வகை ஐந்தும் இசை திரிந்திசைப்பனவாகலின்
அவற்றை இவ்வியலுட் சுட்டி ஓதுவாராயினார் என அறிக.
 

இனி  "உரிப்புறத்ததுவே"  என்பதற்குக்  கருப்பொருள் எனப் பொருள்
கொண்டால் என்னை எனின்? இறைச்சி  என்னும் தொழிற்பெயர் அங்ஙனம்
உரைகோடற் கியையாதாகலின் கூடாதென்க.
 

இறைச்சி  என்பது  கருப்பொருள்களின்  பண்பும், செயல்களும் ஆகிய
நடக்கைகளே என்பதனை,
 

ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்

(கற்-29)
 
எனவும்
 

புணர்ந்துடன் போகிய கிழவோள் மனையிருந்து

இடைச்சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி

(நற்-7)
 

அன்புறு தகுந இறைச்சியும் சுட்டலும் 

(பொரு-36)
 
எனவும்
 

ஆசிரியர்  ஓதுதலான்  அறிக. "ஆற்றிடைக் கண்ட பொருள் " என்றது
கருப்பொருள்களை.  "இறைச்சி"    என்றது    அவற்றின்   நடக்கைகளை.
'இடைச்சுரத்து   இறைச்சி"   என்றது  கருப்பொருள்களின்  நடக்கைகளை.
'வினை'  என்றது  தலைவன் செய்த  தண்ணணி  முதலியவற்றை  என்பது
அச்சூத்திர உரைகளுள் கண்டுகொள்க. மேலும்
 

வீழுநர்க் கிறைச்சியாய் விரல்கவர் பிசைக்குங்கோல்

ஏழுந்தன் பயன்கெட இடைநின்ற நரம்பறூஉம்

யாழினும் நிலையில்லாப் பொருளையும் நச்சுபவோ

(கலி-7)
 

இன்புற்றார்க் கிறைச்சியாய் இயைவதே செய்தாய்மன்

அன்புற்றார் அழநீத்த அல்லலுட் கலங்கிய

துன்புற்றார்த் துயர்செய்தல் தக்கதோ நினக்கு

(கலி-184.31)
 

எனவரும்  நல்லிசைப்  புலவோர்  செய்யுட்கண் இச்சொல் கருப்பொருளின்
செயற்பாடு குறித்தே நிற்றலைத் தேர்ந்து கொள்க.
 

இச்  சூத்திரத்தான்  இறைச்சியின் இலக்கணங்  கூறினார்.  இறைச்சியுள்
ஒரோவழி உள்ளுறைப்பொருள் பிறக்குமாற்றை வரும் சூத்திரத்தாற் கூறுப.