பொருளியல்235

ஏத்துதல்  தலைவனது குறிப்பினை உணரும் பயத்தாக நிற்கும் என்க. இஃது
வரும் சூத்திரத்தானும் விளங்கும்.
 

எ - டு :

நாயுடை முதுநீர் கலித்த தாமரைத்

தாதின் அல்லி அவிர்இதழ் புரையும்

மாசில் அங்கை மணிமருள் செவ்வாய்

நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்

யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்

தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே

கூர்எயிற் றரிவை குறுகினள் யாவரும்

காணுநர் இன்மையின் செத்தனள் பேணி

வருகமாள என்உயிர் எனப்பெரிது வந்து

கொண்டனள் நின்றோள் கண்டுநிலைச் செல்லேன்

மாசில் குறுமகள் ! எவன்பே துற்றனை

நீயும் தாயை இவற்கென யான்தற்

கரைய வந்து விரைவனென் கவைஇ

களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா

நாணி நின்றோள் நிலைகண்டு யானும்

பேணினென் அல்லனோ மகிழ்ந வானத்து

அணங்கருங் கடவுள் அன்னோள்நின்

மகன் தாயாதல் புரைவதாங் கெனவே

(அக-16)
 

எனத்  தலைவி பரத்தையை ஏத்தினமையும், நீயும் தாயை இவற்கு எனவும்,
மகன்  தாயாதல்  புரைவது  எனவும்  கூறினமையான்  உள்ளத்து  ஊடல்
அமைந்துள்ளமையும் கண்டு கொள்க.
 

சூ. 235 :

கிளவோள் பிறள்குணம் இவையெனக் கூறிக்

கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள்

(39)
 

க - து :

தலைவி கூற்றின்கண் அமையுமொரு திறன் கூறுகின்றது.
 

பொருள் :  தலைவி  பிறள்  ஒருத்தியின்  குணங்கள்  இத்தன்மையன
எனக்     கூறுமுகத்தான்    அவள்மாட்டுத்    தலைவன்   கொண்டுள்ள
உளக்குறிப்பினை அறிதற்கும் உரியளாவாள்.
 

பரத்தையை  ஏத்துதலேயன்றிப் அவள்  குணத்தைக் கூறித்  தலைவன்
குறிப்பினை  உணரும்  என  நின்றமையின் உம்மை எச்சவும்மை இதனான்
பரத்தையை  ஏத்துதலும்  தலைவன்  குறிப்பினை  உணரும்  பயத்ததாதல்
விளங்கும்.
 

எ - டு :

கண்டனெம் அல்லமோ மகிழ்நநின் பெண்டே

பலராடு பெருந்துறை மலரொடு வந்த