இது முகைஎயிறாக நகும் என மருட்கைபற்றிக் கூறியது. |
| அவரோ வாரார் முல்லையும் பூத்தன |
| பறியுடைக் கையர் மறியினத்து ஒழியப் |
| பாலொடு வந்து கூழொடு பெயரும் |
| ஆடுடை இடைமகன் சென்னிச் |
| சூடிய வெல்லாம் சிறுபசு முகையே |
(குறு-221) |
சூடிய எல்லாம் முல்லை என மிக்கதாக எண்ணிக் கூறியது. இவ்வாறு வருவன பிறவற்றையும் இந்நான்கனுள் அடங்குமாறு ஓர்ந்து கொள்க. |
நச்சினார்க்கினியர், பொருளியலுள் கூறப்பெறுவன எல்லாம் வழுவமைதி இலக்கணமெனத்தான் திரியக்கொண்ட கோட்பாட்டிற்கு ஏற்ப இது பெருந்திணை வழுவமைக்கின்றது எனவும் "தலைவைத்த" என்பதற்கு யாதோரியைபுமின்றி ஆறாம் அவதியிற் கூறிய மெய்ப்பாடுகள் எனவும் வலிந்து கூறும்பொருள் சூத்திரச்சொற்றொடர் அமைப்பிற்குச் சிறிதும் பொருந்தாமையறிக. அவர் அங்ஙனம் பொருள் கூறற்குக் காரணம் நெய்தற் கலியுள் வரும் பெருந்திணைக் கூறுகளுக்கு இலக்கணம் கூறல் வேண்டுமென்னும் கருத்தேயாம். 'புரிவுண்ட புணர்ச்சி' (கலி-14) முதலியவற்றுள் நிகழும் பெருந்திணைக் கூறுகளுக்கு அகத்திணையியலுள் கூறியுள்ள பொதுவிலக்கணமே சாலும் என்பதும் பிறவும் எனது தொல்காப்பியக் கோட்பாடுகள் என்னும் கட்டுரையுள் விளங்கும். |
| சூ. 238 : | இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி |
| நிரம்பக் கூறி நிறுத்தல் அன்றியும் |
| வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலும் |
| நல்வகை யுடைய நயத்திற் கூறியும் |
| பல்வகை யானும் படைக்கவும் பெறுமே |
(42) |
க - து : | களவுக்க தலத்தே தோழிக்குரிய ஒருசார் கூற்றுப் பற்றிய மரபு கூறுகின்றது. |
பொருள் : தலைவியை எய்துவிக்குமாறு இரந்து குறையுற்ற தலைவனைத் தோழி பெரிதும் சேய்மைப்படுத்தி நீக்கி நிறுத்துக் கூறுதலன்றியும், நும் களவொழுக்கத்தினை யான் அறிவல் என வாய்மை கூறலும், தலைவியை யானறியேன், குற்றேவல் நிலையினேன் என்பவை முதலாய பொய்ம்மைகளை இட்டுரைத்தலுமாகத், தலைவனது காதற்கேண்மை மிகுதற்குரிய |