தோழி இவ்வாறு படைத்துக் கூறுவனயாவும் தலைவனது காதற்கேண்மையை மிகுத்து வரைந்து எய்தல் வேண்டுமென்னும் குறிப்பினவாதலின் இதனை இசை திரிந்திசைக்கும் பொருளியலுள் சார்த்திக் கூறினார் என அறிக. |
| சூ. 239 : | உயர்மொழிக் கிளவி உறழுங் கிளவி |
| ஐயக் கிளவி ஆடூஉவிற் குரித்தே |
(43) |
க - து : | தலைவன் தலைவியர் கூற்றுப் பற்றியதோரியல்பு கூறுகின்றது. |
பொருள் :புலனெறி வழக்கின்கண் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கூறும் கிளவி தலைவற்கும் தலைவிக்கும் ஒப்ப உறழ்ந்து வரும். ஐயுற்றுக் கூறும் கிளவி தலைவிக்கு ஆகாது தலைவற்கே உரித்தாக வரும். |
உறழ்தல் = நியதியின்றி மாறி வருதல். தலைவி ஐயுறின் அதனைக் களைதற்குரிய கருவியாகிய உரனுடைமை தலைவிக்கு ஓதப்பெறாமையான், அச்சமே மிகும். அவ் அச்சத்தாற் காமக்குறிப்பு அழியுமாதலின் தலைவி ஐயுறுதல் புலனெறி வழக்கன்று என்க. |
ஐயக்கிளவியை வரையறை செய்வாராய் உயர்மொழிக் கிளவியை உடன் ஓதினார் என்க. பின்னர்த் தோழிக்கும் உயர்மொழிக் கிளவியை எய்துவித்தற் பொருட்டென அறிக. |
நச்சினார்க்கினியர் உறழும் கிளவி என்பதற்கு எதிர்மறுத்துக் கூறும் கிளவி என உரை கூறுவார். அஃது அவரவர்க்கு ஓதப்பட்ட கிளவிகளுள் அடங்குமாதலின் பயனில் கூற்றாய் முடியுமென்க. |
எ - டு : | களவியலுள் கண்டு கொள்க. |
சூ. 240 : | உறுகண் ஓம்பல் தன்னியல் பாகலின் |
| உரிய தாகும் தோழிகண் உரனே |
(44) |
க - து : | தோழிக்கு எய்தியதன்மேல் நிகழ்வதொரு சிறப்பிலக்கணம் கூறுகின்றது. |
பொருள் : உரனுடைமை பெண்பாற்குரிய இலக்கணமன்றாயினும் தலைமக்கட்குக் கூறும் இடையூறுகளை உறாமற் களைந்து அவரைப் போற்றுதல் தோழிக்குரிய இயல்பாதலின் அதற்குக் கருவியாகும். உரன் என்னும் அறிவுத்திண்மை தோழியிடத்தும் உரியதாகும். 'தோழிகண்ணும்' என்னும் உம்மை விகாரத்தாற் றொக்கது. |