| எ - டு : | பால்மருள் மருப்பின்' என்னும் பாலைக்கலியுள் |
| "பொருள்வயிற் பிரிதல் வேண்டும் என்னும் |
| அருளில் சொல்லும் நீசொல் லினையே |
| நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி |
| நின்னிற் பிரியலென் அஞ்சல் ஓம்புஎன்னும் |
| நன்னர் மொழியும் நீமொழிந் தனையே |
| அவற்றுள் யாவோ வாயின - மால்மகனே |
| கிழவோர் இன்னோர் என்னாது பொருள்தான் |
| பழவினை மருங்கின் பெயர்புபெயர்பு உறையும் |
| அன்ன பொருள்வயிற் பிரிவோய்" |
(21) |
என உரனொடு இடித்துக் கூறியவாறு கண்டுகொள்க. |
சூ. 241 : | உயர்மொழிக் கிளவியும் உரியவா லவட்கே |
(45) |
க - து : | இதுவும் அது |
பொருள் : உறுகண் ஓம்புதலேயன்றித் தலைவனையும் தலைவியையும் உயர்த்துக் கூறும் கிளவியும் தோழிக்குரியதாக வரும். |
| "தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை |
| நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் |
| மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம் |
| அணங்கென அஞ்சுவர் சிறுகுடி யோரே" |
(கலி-52) |
இது தலைவனை உயர்த்துக் கூறியது. |
| யாயா கியளே விழவுமுத லாட்டி |
| பயறுபோல் இணர பைந்தாது படீஇயர் |
| உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக் |
| காஞ்சி ஊரன் கொடுமை |
| கரந்தனள் ஆகலின் நாணிய வருமே |
(குறு-10) |
இது தலைவியை உயர்த்துக் கூறியது. |
பொதுப்படக் கூறியதனான் தாயரை உயர்த்துக் கூறுதலும் கொள்க. |
| சூ. 242 : | வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல் |
| தாவின் றுரிய தத்தங் கூற்றே |
(46) |
க - து : | வாயில்கட்குரிய கூற்றுப் பற்றியதொரு மரபு கூறுகின்றது. |