| எ - டு : | மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் |
| தாமிரந் துண்ணும் அளவை |
| ஈன்ம ரோஇவ் வுலகத் தானே |
(புறம்-74) |
என்பது தனக்குற்ற வருத்தம் பற்றி வந்த இளிவரலாம். |
| ஒன்றுஇரப்பான் போல்எளி வந்தும் சொல்லும்-உலகம் |
| புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன் |
| அன்னான் ஒருவன்றன் ஆண்டகை விட்டென்னைச் |
| சொல்லஞ் சொற்கேட்டி ...? |
(கலி-47) |
என்பது பிறர்க்குற்ற வருத்தங் காரணமாகப் பிறந்த இளிவரல். |
4. மென்மையாவது : ஆற்றலும் திறனும் அமையாமையும் வலியின்மையுமாம். மென்மை எனினும் நொய்மை எனினும் ஒக்கும். நல்குரவெண்பார் இளம்பூரணர், அஃது அழுகைக்குப் பொருளாகக் கூறினமையான் சாலாதென்க. |
| எ - டு : | பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம் |
| பெண்மை யுடைக்கும் படை |
(குறள்-1258) |
என்பது தன் மாட்டமைந்த மென்மைபற்றி வந்த இளிவரல். |
| கடந்தடு தானை மூவிரும் கூடி |
| உடன்ற னிராயினும் பறம்புகொளற் கரிதே |
(புறம்-110) |
என்பது பிறர் மென்மை பற்றி வந்த இளிவரலாம். |
"யாப்புற" என்றதனான் "யானை, ஒருகை உடையது எறிவலோயானும் இருகை சுமந்து வாழ்வேன்" எனப் பகைக்கு மென்மை கற்பித்துக் கூறலும் இளிவரலாய் அடங்குமென்க. |
| சூ. 256 : | புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு |
| மதிமை சாலா மருட்கை நான்கே |
(7) |
க - து : | புதுமை முதலிய நான்கும் பற்றி மருட்கை பிறக்குமென்கின்றது. |
பொருள் :அறிவு, நிறையாவழித்தாகும் மருட்கை என்னும் மெய்ப்பாட்டிற்குக் காரணமாகிய பொருள், புதுமையும் பெருமையும் சிறுமையும் ஆக்கமுமாகிய நான்கும் எனக் கூறுவர் புலவர். ஒடு எண்ணுப் பொருட்டாய் வந்தது. ஏகாரம் ஈற்றசை. |
'மதிமை சாலா' என்றது யாதொரு பொருள் மருட்கை செய்கின்றதோ அப்பொருள் பற்றிய அறிவு நிரம்பாமையாம். மருட்கை எனினும் வியப்பெனினும் இறும்பூதெனினும் ஒக்கும். அற்புதம் என்பது வடசொல். இவையும் மேலன போல இருபாலும் பற்றி வரும். |