1. புதுமையாவது :அதுகாறும் காணாததைக் காண்டலும் நிகழாதது நிகழ்தலுமாம். |
| எ - டு : | நீங்கிற் றெறூஉம் குறுகுங்காற் றண்ணென்னும் |
| தீயாண்டுப் பெற்றா ளிவள் |
(குறள்-1104) |
என்றது தன்கண் நிகழ்ந்த புதுமைபற்றிப் பிறந்த மருட்கை. |
| ................... பெருந்தேர் யானும் |
| ஏறிய தல்லது வந்த வாறு |
| நனியறிந் தன்றோ விலனே |
| .................. இல்வயின் நிறீஇ |
| இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே |
(அகம்-384) |
என்பது பிறர்கண் நிகழ்ந்த புதுமைபற்றிப் பிறந்த மருட்கை. |
2. பெருமையாவது :அளவையின் இகத்து கழியப் பெரிதாயினது எனக் கருதிக் கோடலாம். (பெருமை - பெருக்கம்) |
| எ - டு : | புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் |
| அள்ளிக்கொள் வற்றே பசப்பு |
(குறள்-1127) |
கையான் முகக்குமளவிற்குப் பெருகிற்றென்றலின் இது தன்கண் நிகழ்ந்த பெருமைபற்றிப் பிறந்த மருட்கையாம். |
| கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் |
| திங்களைப் பாம்புகொண் டற்று |
(குறள்-1146) |
ஒரு நாளைக் காட்சியளவிற்றாக நில்லாது அலர் ஊரெங்கும் பரவிற்றென்றலின் இது பிறர்கட்டோன்றிய பெருமைபற்றி வந்த மருட்கை. |
3. சிறுமையாவது : அளவையின் இகந்து தவச்சிறிதாயினது எனக் கருதிக்கோடல். (சிறுமை - சிறுத்தல்.) |
| எ - டு : | தணந்தமை சால அறிவிப்ப போலும் |
| மணந்தநாள் வீங்கிய தோள் |
(குறள்-1233) |
இது தன்கண் நிகழ்ந்த சிறுமைபற்றிப் பிறந்த மருட்கை. |
| மைம்மல ரோதி மணிநகைப் பேதைதன் |
| கொம்மை வரிமுலை ஏந்தினும் - அம்ம |
| கடையிற் சிவந்த கருநெடுங்கட் பேதை |
| இடையிற் சிறியதொன் றில் |
(பேரா - மேற்கோள்) |
இது பிறர் கட்டோன்றிய சிறுமைபற்றி வந்த மருட்கை. |