| எ - டு : | அற்றம்பார்த் தல்கும் கடுங்கண் மறவர்தாம் |
| கொள்ளும் பொருளிலராயினும் வம்பலர் |
| துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவலின் |
| புள்ளும் வழங்காப் புலம்புகொள் ஆரிடை |
(கலி-4) |
என்பதனாற் கள்வர் அச்சத்திற்குரியராமாறு கண்டு கொள்க. |
4. தம்மிறை :என்பது இரட்டுற மொழிதலாய் (தம் இறை) அரசனையும், வழிபடு தெய்வத்தையும் (தம்மிறை) தாம்புரிந்த தீவினைக்குற்றத்தையும் குறித்து நின்றது. எனவே இவ்இருவகை பற்றியும் அச்சம் பிறக்குமென்பதாயிற்று. |
| எ - டு : | எருத்துமேல் நோக்குறின் வாழலே மென்னும் |
| கருத்திற்கை கூப்பிப் பழகி - எருத்திறைஞ்சிக் |
| கால்வண்ண மல்லாற் கடுமான்றேர்க் கோதையை |
| மேல்வண்ணங் கண்டறியா வேந்து |
(பேரா-மேற்கோள்) |
என்பது அரசன் பொருளாக அச்சம் பிறந்தது. |
| மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் |
| கொடியோர்த் தெறூஉ மென்ப, யாவதும் |
| கொடியோ ரல்லரெம் குன்று கெழுநாடர் |
(குறு-87) |
என்பது தலைவி தலைவன் பொருட்டுத் தெய்வத்தை அஞ்சியதாம். |
பகைபாவ மச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண் (குறள்-142) அச்சமே கீழ்கள தாசாரம் (குறள்-1075) என வருவனவற்றான்தமது குற்றம் அச்சத்திற்கு ஏதுவாதலைக் கண்டு கொள்க. இது தன்கண்ணும் பிறர்கண்ணும் என்னும் இருபாலும் பற்றிவரும். ஏனைய பிற பொருட்டாயே வருமெனக் கொள்க. "பிணங்கல் சாலா" என்றதனான். |
| அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது |
| அஞ்சல் அறிவார் தொழில் |
(குறள்-427) |
என்றதனான் பழியொடுவருவன பற்றி அஞ்சும் அச்சமும் இதன் பாற்படுத்துக் கொள்க. |
| சூ. 258 : | கல்வி தறுகண் இசைமை கொடையெனச் |
| சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே |
(9) |
க - து : | கல்வி முதலிய நான்கும் பற்றிப் பெருமிதம்வரும் என்கின்றது. |