4. கொடையாவது :வரையாது வழங்கும் வண்மை. அஃது ஈகைபோலாது செல்வமேயன்றி உயிரும் உடம்புமாகிய பொருள் யாவற்றையும் வழங்குதலாம். |
| எ - டு : | முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு |
| முந்நூறூரும் பரிசிலர் பெற்றனர் |
(புறம்-110) |
| பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் |
| நாடிழந் தனினும் நனியின் னாதென |
| வாள்தந்தனனே தலையெ மக்கீய |
(புற-165) |
| அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக் |
| கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத் |
| தன்னகம் புக்கக் குறுநடைப் புறவின் |
| தபுதி யஞ்சிச் சீரை புக்க |
| வரையா ஈகை உரவோன்" |
(புறம்- ) |
எனவரும். |
"சொல்லப்பட்ட" என்றதனான் பல்லிருங்க கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைக என்தாரே (புறம்-73) எனக் காமஒழுக்கம் பற்றி வரும் வீறும் பெருமிதமாக அடங்குமெனக் கொள்க. இவை நான்கும் தன் கட்டோன்றிய பொருள் பற்றிப் பிறக்குமென்க. |
| சூ. 259 : | உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற |
| வெறுப்பின் வந்த வெகுளி நான்கே |
(10) |
க - து : | உறுப்பறை முதலிய நான்கும் பற்றி வெகுளி தோன்று மென்கிறது. |
பொருள் :வெறுப்பினான் வந்த வெகுளியென்னும் மெய்ப்பாட்டிற்குக் காரணமாகிய பொருள் உறுப்பறை குடிகோள் அலை கொலை என்னும் நான்குமெனக் கூறுவர் புலவர்; இவை நான்கும் பிறர் கட்டோன்றுவனவாய் நிகழும். |
1. உறுப்பறையாவது :உறுப்புக்களைச் சிதைத்தலும் ஊறுபடுத்தலுமாம். உறுப்பாவது கை, கால், கண், செவி முதலிய உடலுறுப்புக்களும், தூது, ஒற்று, அமைச்சு முதலிய அரச உறுப்புக்களுமாம். |
| எ - டு : | முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று |
| .... ..... ...... ....... ....... ....... ................. ....... ......... ........ |
| நிறஞ்சாடி முரண்தீர்த்த நீள்மருப் பெழில்யானை |
(கலி-52) |
எனவரும். |
2. குடிகோளாவது : தன்குடிமைக்கும் தன்னாற் புரக்கப்படும் குடிமக்களுக்கும் தீங்கிழைத்தல். கொளுவுதல் கோள் என நின்றது. |