| எ - டு : | சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் |
| கோடாமை சான்றோர்க் கணி |
(குறள்-118) |
எனவரும். |
| பெரியோரை வியத்தலு மிலமே |
| சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே |
(புறம்-192) |
என்பதுமது. இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். |
இதனை வடமொழி நாடக நூலார் கூறும் சாந்தம் என்னும் சுவையாகக் கருதி விளக்குவர் உரையாசிரியன்மார். சாந்தம் வேறு ; நடுவுநிலைவேறு என அறிக. |
4. அருளலாவது :எல்லா உயிர்களிடத்தும் அன்பின் முதிர்ச்சியாகிய கனிவுள்ளத்தாற் புரியும் செயல். |
| எ - டு : | உடாஅ போராஅ ஆகுத லறிந்தும் |
| படாஅம் மஞ்ஞைக் கீத்த வெங்கோ |
| கடாஅ யானைக் கலிமான் பேகன் |
(புற-141) |
எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். |
வடநூலார் கூறும் கருணையை ஒருபுடைஒக்கும். இரக்கம் வேறு ; இவ் அருளல் வேறு என அறிக. |
5. தன்மையாவது :குணவியல்பும் குலவியல்பும் தோன்ற ஒழுகும் இயற்கைப் பண்பு. |
| எ - டு : | "வேழம் வீழ்த்த" என்னும் புறப்பாட்டினுள் |
| கோஎனப் பெயரிய காலை ஆங்கது |
| தன்பெய ராகலின் நாணி ............. |
| ............ பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மென |
| சுரத்திடை நல்கியோனே |
(புறம்-152) |
எனவரும். |
இதன்கண் வல்வில் ஓரியின் தலைமைத் தன்மையும் வள்ளற்றன்மையும் புலப்பாடாதல் காண்க. |
ஈண்டு இஃது உவகைக்குப் பொருளாக அமைந்தது. |
| "திரை பொரு முந்நீர்" என்னும் புறப்பாட்டினுள் |
| ஈயென இரத்தலோ அரிதே நீயது |
| நல்கினும் நல்கா யாயினும் .... |
| ...... ....... ........ ......... ........ ........ ....... ...... |
| கொண்பெருங் கானம் பாடலெமக் கெளிதே |
(புறம்-154) |
இதன்கண் மோசிகீரனாரின் புலமைத்தன்மை புலப்பாடாதல் காண்க. ஈண்டு இஃது பெருமிதத்திற்குப் பொருளாக அமைந்தது. |