9. கைம்மிகலாவது : குறையாயினும் நிறையாயினும் அளவில் மிகுதல். |
| எ - டு : | பாலில் குழவி அலறவும் மகளிர் |
| பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில் |
| வினைபுனை நல்லில் இனைகூக் கேட்பவும் |
| இன்னாதம்ம ஈங்கினி திருத்தல் |
(புறம்-44) |
இதன்கண் நெடுங்கிள்ளி பன்னாள் அரணடைத் திருந்தமையான் மக்கள்துயர் கையிகந்தமையைக் கோவூர்கிழார் புலப்படுத்தியமை காண்க. |
| கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் |
| அடுமுரண் தேய்க்கும் அரம் |
(குறள்-567) |
என்பதுமது. இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
| இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம் |
| மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து |
(குறள்-539) |
இது மகிழ்ச்சி கையிகந்தமை கூறிற்று. |
10. நலிதலாவது :இடுக்கணுறுதலும் உறுத்தலுமாம். இஃது தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாய சொல். |
| எ - டு : | குன்றத் திருந்த குரீஇயினம் போல |
| அம்பு சென்றிருந்த அரும்புண் யானைத் |
| தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து |
| நாஞ்சில் ஒப்ப நிலமிசைப் புரள |
(புறம்-19) |
இது பிறரால் தான் நலிவுற்றது. |
| மடப்பால் ஆய்மகள் வள்ளுகிர் தெறித்த |
| குடப்பால் சில்லுறை போலப் |
| படைக்கு நோயெல்லாந் தானா யினனே |
(புற-276) |
இது தன்னான் பிறர் நலிவுற்றது. இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
11. சூழ்ச்சியாவது : புறநிகழ்ச்சிகளைப் பற்றி ஆழ்ந்து எண்ணுதல். சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் (குறள்-671) என்பதனான் இதன் பொருளுணர்க. |
| எ - டு : | பல்சான் றீரே பல்சான் றீரே |
| செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும் |
| பொல்லாச் சூழ்ச்சி பல்சான்றீரே |
(புற-246) |
| பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர் |
| எழுபது கோடி யுறும் |
(குறள்-639) |
என்பதும் அது. |
இஃது அச்சத்திற்குரிய பொருளாக அமையும். |