எனவும் வரும். இஃது உவகைக்கும் சிறுபான்மை அச்சத்திற்கும் பொருளாக அமையும். |
19. வெரூஉதலாவது :விரும்பத்தகாதன கண்டுழியும் நிகழ்வழியும் எய்தும் விதிர்ப்பு. |
| எ - டு : | காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின் |
| அதர்கெடுத் தலறிய சாத்தொடு ஓராங்கு |
| மதர்புலி வெரீஇய மையல் வேழத்து |
| இனந்தலை மயங்கிய நனந்தலைப் |
(அக-39) |
எனவரும். இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும். |
20. மடிமையாவது : செய்தற்குரியவற்றைச் செய்யாது சோர்ந்திருத்தல். அஃதாவது முயற்சியின்றிக் கிடத்தல். |
| எ - டு : | அறந்தலைப் பிரியா தொழுகலும் சிறந்த |
| கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும் |
| வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கில் |
(அக-173) |
எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
21. கருதலாவது :ஒன்றைச்சுட்டி ஆழ்ந்து எண்ணுதல். |
| எ - டு : | ஆஅங்கு, எனைப்பகையும் அறியு நன்ஆய் |
| எனக்கருதிப் பெயரேத்தி |
| வாயார நின் இசை நம்பி |
| சுடர்ச் சுட்ட சுரத்தேகி |
| இவண்வந்த பெருநசையேம் |
(புற-236) |
எனவரும். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். |
22. ஆராய்ச்சியாவது :ஒன்றனது நலந்தீங்குகளை நடுவு நின்று நோக்கியறிதல். |
| எ - டு : | கோடு துவையா கோள்வாய் நாயொடு |
| காடுதேர்ந் தசைஇய வயமான் வேட்டு |
| வயவர் ..... ...... ....... ...... |
(நற் - 276) |
எனவரும். தேர்தல் ஆராய்ச்சியின் பயனாகலின் இச் செய்யுளுள் தேர்ந்தசைஇய என்றதனான் அது பெறப்படும். |
| தத்தங் கலங்களுள் கையுறை என்றிவற்கு |
| ஒத்தவை ஆராய்ந்தணிந்தார் |
(கலி-84) |
என்பதுமது. இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். |
23. விரைவாவது :காலத்தையும் இடத்தையும் சுருக்கி மேற்செல்லக் கடிதுவிழையும் உள்ள எழுச்சி. |