| எ - டு : | கன்றமர் கறவை மான |
| முன்சமத் தொழிந்ததன் தோழற்கு வருமே |
(புற-275) |
| போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ |
(புற-82) |
எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். |
24. உயிர்ப்பாவது : ஆற்றாமை காரணமாக எழும் நெடுமூச்சு. |
| எ - டு : | திருந்தரை நோன்காழ் வருந்த ஒற்றி |
| நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து |
| அலமரல் யானை உருமென முழங்கவும் |
(புற-44) |
பருந்துயிர்த்து, இடைமதில் சேக்கும் புரிசை (புற-343) எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
25. கையாறாவது : விருப்பிற்குரிய பொருளைப்பிரிதலும் இழத்தலும் பற்றி வரும் செயலறவு. |
| எ - டு : | புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது |
| கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் |
| வாடிய பசியரா கிப்பிறர் |
| நாடுபடு செலவின ராயின ரினியே |
(புற-240) |
எனவரும். இஃது அழுகைக்குப் பொருளாக அமையும். |
26. இடுக்கணாவது :இடையூறு காரணமாக வரும் துன்பம். |
| எ - டு : | அறனில் கூற்றம் திறனின்று துணிய |
| பிறனா யினன்கொல் இறீஇயர் என்உயிரென |
| துயல்வுறு சிறுமையன் பலபுலந் துறையும் |
| இடுக்கண் மனையோள் தீரிய இந்நிலை |
| விடுத்தேன் .... |
(புற-210) |
எனவரும். இஃது அழுகைக்குப் பொருளாக அமையும். |
27. பொச்சாப்பாவது :மறத்தல் கூடாதவற்றை மறந்திருத்தல். |
| எ - டு : | நள்ளி வாழியோ நள்ளி நள்ளென் |
| மாலை மருதம் பண்ணிக் காலை |
| கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி |
| வரவெமர் மறந்தனர் |
(புற-149) |
எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |