294மெய்ப்பாட்டியல்

28. பொறாமையாவது :செருக்கும்   திறலும்   காரணமாக  ஒன்றைப்
பொறுத்தலாற்றாத பண்பு.
 

எ - டு :

வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்

போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது

இடம்சிறிதென்னும் ஊக்கந் துரப்ப

(புற-8)
 

எனவரும். இது பெருமிதத்திற்குப் பொருளாக வரும்.
 

அழுக்காறு  என்னும்  பொறாமை  வேறு ;  இதுவேறு  என  உணர்க.
அழுக்காறு    அறனில்   குணமாகலின்   அதனை   மெய்ப்பாட்டிற்குரிய
பொருளாகக் கூறுதல் ஒவ்வாதென அறிக.
 

29. வியர்த்தலாவது :இகல்  காரணமாக  வரும்  உள்ளப்  புழுக்கம்,
மெய்ப்புழுக்கம் சிறுபான்மைவரினும் கொள்க.
 

எ - டு :

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

(குறள்-487)
 

இது வெகுளிக்குப் பொருளாக வரும்.
 

"பெயர்த்தனென்   முயங்கயான்  வியர்த்தனென்   என்றனள்"  என்பது
மெய்ப்புழுக்கம். இஃது இளிவரல் பற்றி வரும்.
 

30. ஐயமாவது :ஒரு  பொருளை   இன்னது   என  வரைந்துணர்தற் காகாத மனத்தடுமாற்றம்.
 

எ - டு :

செருப்பிடைச் சிறுபரலன்னன்

...... ....... ....... ....... ........ ........ ....... ......... ......
 

யார்கொலோ அளியன் தானே, தேரின்

ஊர்பெரி திகந்தன்று மிலனே, அரண்எனக்

காடுகைக் கொண்டன்று மிலனே

(புற-257) 
 
எனவரும்.
 

நாடனென்கோ ஊரனென்கோ

பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்ப னென்கோ

யாங்ஙனம் மொழிகோ ஓங்குவாட் கோதையை

(புற-49)
 

என்பதுமது.  ஈண்டு  இஃது உவகைக்குப்  பொருளாக நின்றது.  இது  பிற
மெய்ப்பாட்டிற்குரிய பொருளாகவும் வரும்.
 

31. மிகையாவது :பழிவழிச் செல்லும் செருக்கு - குற்றம்.
 

எ - டு :

மன்னிய சென்ற ஒண்ணுத லரிவை

புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு

ஒன்பதிற் றொன்பது களிற்றொடு அவள்நிறை