298மெய்ப்பாட்டியல்

இவை   நான்கும்  முறையாக   அமைந்த  செய்யுளாகப்  பேராசிரியர்
காட்டும் மேற்கோள்.
 

யான்றற் காண்டொறும் தான்பெரிது மகிழாள்

வாணுதல் வியர்ப்ப நாணினள் இறைஞ்சி

மிகைவெளிப் படாது நகைமுகங் கரந்த

நன்னுதல் அரிவை தன்மனஞ் சிதைந்ததை

நீயறிந் திலையால் நெஞ்சே

யானறிந்தேனது வாயாகுதலே
 

என்பதாகும்.
 

இஃது உரைக்கேற்ப யாத்த பாடலாகும்.
 

சூ. 263 :

கூழை விரித்தல் காதொன்று களைதல்

ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலொடு

ஊழி நான்கே இரண்டென மொழிப

(14)
 

க - து :
 

கூழைவிரித்தல்    முதலிய      நான்கும்     இரண்டாங்கூறு
என்கின்றது.
 

பொருள் :கூழை விரித்தல், காதொன்று களைதல்,  ஊழணி  தைவரல்
உடைபெயர்த்துடுத்தல் ஆகிய முறைமையுடைய  நான்கும்  இரண்டாங்கூறு என மொழிவர் ஆசிரியர்.
 

1. கூழை விரித்தலாவது :கண்கூட முடித்த  கனங்குழல் உள்ளத்தின்
கண் நேர்ந்த  சிதைவான்  நெகிழ்ந்தமையின்  அதனைச்  செம்மையுறுத்தற்
பொருட்டு விரித்தல்.
 

இது செயன்மையாயினும் காதற்குறிப் புடையமையான் மெய்ப்பாட்டிற்குப்
பொருளாயமைந்ததென அறிக. பின்வரும் செயற்பாடுகளுக்கும் இவ்விளக்கம்
ஒக்கும். இதற்குப்  பேராசிரியர்  வலிந்து  கூறும்  விளக்கம்  நூல்நெறிக்கு
ஏலாமையை ஓர்ந்து கொள்க. இஃது இளிவரலுக்குப் பொருளாக  அமையும்.
எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டுகொள்க.
 

2. காதொன்று களைதலாவது :காதணியாகிய தோடு செவித்துளையில்
ஒன்ற   நிறுத்துவதாகலின்   உள்ளத்து   நேர்ந்த  சிதைவினான்   மேனி
மெலிந்தமை  போன்ற  உணர்வு  காரணமாக  முன்னர்  விரித்த  குழலை
முடிப்பவள் ஆங்கே காதணிகள் தாம்நெகிழ்ந்து வீழாமுன் அவற்றை நன்கு
பொருத்துதற்காகக் களைந்து கொள்ளுதல். காதொன்று-காதணி,  தொடுத்தல்
தொடியாயினாற்போல ஒன்றுதல் ஒன்று என நின்றது. இதனைத் தொழிலாகு
பெயர்    என்ப.    இதுவும்   இளிவரலுக்குப்   பொருளாக   அமையும்.
எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டு கொள்க.