| எ - டு : | ....... ....... குன்ற நாடன் |
| உடுக்குந் தழைதந் தனனே யாமஃது |
| உடுப்பின் யாயஞ் சுதுமே, கெடுப்பின் |
| கேளுடைக் கேடஞ் சுதுமே, ஆயிடை |
| வாடல கொல்லோ தாமே ...... ....... |
(நற்-359) |
எனவரும். |
| சூ. 266 : | தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல் |
| கரந்திடத் தொழிதல் கண்டவழி யுவத்தலொடு |
| பொருந்திய நான்கே ஐந்தென மொழிப |
(17) |
க - து : | தெரிந்துடம்படுதல் முதலிய நான்கும் ஐந்தாங் கூறு என்கிறது. |
பொருள் :தெரிந்துடம்படுதல், திளைப்புவினை மறுத்தல், கரந்திடத் தொழிதல், கண்டவழியுவத்தல் எனப்பொருந்திய நான்கும் ஐந்தாங்கூறு எனப்புகல்வர் ஆசிரியர். |
இவை களவியலுட் கூறிய, "மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்த வழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும், அருமை செய்தயர்ப்பினும், வழிபாடு மறுத்தல், பெற்றவழி மலியினும்" (கள-21) எனவரும் கிளவி முதலியவற்றிற்குரியவாக நிகழும் மெய்ப்பாடுகட்குப் பொருள்களாம் என்பதை வலியுறுத்தப் 'பொருந்திய நான்கு' என்றார். |
1. தெரிந்துடம் படுதலாவது : தலைவன் ஒருவழித்தணத்தல் முதலியவற்றையும், வரைவுநீட்டித்தலையும் அம்பலும், அலரும் எழுந்து பரவுதலையும் தாயர் வெறியாட்டு முதலியவற்றை நிகழ்த்துதலையும் பிறவற்றையும் ஆராய்ந்து இனிச் செயற்பாலனவற்றைத் தேர்ந்து அறத்தொடுநிலை வாயிலாகத் தனது நிலைமையைத் தெரிவிக்கத் தலைவி உள்ளம் நேர்தல். |
உடம்படுதல் என்பது ஈண்டுத் தெரிவித்தல் என்னும் பொருள்பட நின்றது. பொதுப்படக் கூறியுள்ளமையான் தலைவி உடம்போக்கிற்கு உடம்படுதலும் கொள்க. |
| எ - டு : | ...............அன்னை |
| எவன்செய் தனையோநின் இலங்கெயிறு உண்கென |
| மெல்லிய இனிய கூறலின் வல்விரைந்து |
| உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து |
| உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல் |
| காந்தள் ஊதிய மணிநிறத் தும்பி |
| தீந்தொடை நரம்பின் இமிரும் |
| வான்தோய் வெற்பன் மார்பணங் கெனவே |
(நற்-17) |
எனவரும். இஃது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். |