| எ - டு : | நக்கு நலனும் இழந்தாள் இவளென்னும் |
| தக்கவிர் போலும், இழந்திலேன் மன்னோ |
| மிக்கவென் நாணும் நலனுமென் உள்ளமும் |
| அக்கால் அவனுழை ஆங்கே ஒழிந்தன்று |
| உக்காண், இஃதோர் உம்புயிர்க் கூற்றாகச் |
| செக்கரம் புள்ளித் திகிரி அலவனொடியான் |
| தக்கது பன்மாண் நினைந்து |
(கலி-146) |
எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
4. கையறவுரைத்தலாவது : தனிமையுறுத்தும் தாங்காத் துயரான் தடுமாறும் நெஞ்சினளாய தலைவி தனது அச்சமும் நாணும் மடனும் இகந்து தானுற்ற அவலத்தைச் சுற்றமறியப் பேசுதல். |
| எ - டு : | நினையுமென் உள்ளம்போல் நெடுங்கழி மலர்கூம்ப |
| இனையுமென் நெஞ்சம்போல் இனங்காப்பார் குழல்தோன்ற |
| சாயஎன் கிளவிபோல் செவ்வழியாழ் இசைநிற்பப் |
| போயவென் ஒளியேபோல் ஒருநிலையே பகல்மாயக் |
| காலன் போல்வந்த கலக்கத் தோடென்றலை |
| மாலையும் வந்தின்றினி |
(கலி-143) |
என வரும். |
இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும். கலங்கி மொழிதலும் கையறவுரைத்தலும் அகனைந்திணைக்கண் விரவும் பெருந்திணைப் பகுதிகளாகும். |
| சூ. 268 : | அன்ன பிறவும் அவற்றொடு சிவணி |
| மன்னிய வினைய நிமித்த மென்ப |
(19) |
க - து : | மேற்கூறிய இருபத்து நான்கனோடு அன்னபிறவும் காமவொழுக்கத்து மெய்ப்பாட்டுப் பொருளாக வருமென்றும், இவ் இருபத்து நான்கும் நிலைபேறுடைய காமஒழுக்கம் நிகழ்தற்கு நிமித்தமாம் என்றும் கூறுகின்றது. |
பொருள் :மேல் ஆறு கூறுகளாக வகுத்தோதப்பெற்ற இருபத்து நான்கும் அவை போல்வன பிறவும் அவற்றொடு கூடி நிலைபேறுடைய காமவொழுக்கத்தினது நிமித்தமாம் என்று கூறுவர் புலவர். |
"எல்லா உயிர்க்கும் இன்பமென்பது தான மர்ந்து வரூஉம் மேவற் றாகும்". ஆதலின், மன்பதை மறையாது நிலை பெறுதற்குக் காரணமாகிய காம ஒழுக்கம் "மன்னிய வினை" எனப்பட்டது. |