மெய்ப்பாட்டியல்

க - து :

இயற்கைப்புணர்ச்சி முதல்  தோழியிற்  புணர்வு  நால்வகையாக
வகுத்த   களவொழுக்கத்தின்கண்   சிறந்து   வரும்  இருபத்து
நான்கு பொருள்களைக் கூறிக் களவின் பகுதியாய்க்  களவிற்கும்
வரைவிற்கும் இடைப்பட்ட வரைவு  மலிதல்,  வரைவு  கடாதல்
பகுதிக்கும்   ஒருவழித்தணத்தல்,     வரைவிடை    வைத்துப்
பொருள்வயின் பிரிதல் ஆகிய  பிரிவுப்  பகுதிக்கும்  உரியவாக
நிகழும்   கிளவிகள்   பற்றிவரும்   உணர்வும்   செயலுமாகிய
பொருள்களைத்  தொகுத்து  அவையும்  மன்னிய   வினையின்
நிமித்தமாய் மெய்ப்பாட்டுப் பொருளாக அமையும் என்கின்றது.
 

பொருள் :நலமுற ஆராயின் இன்பத்தை  வெறுத்தல் முதல்  கலக்கம்
ஈறாகக் கூறப்பட்ட இருபதும் மேற்கூறிய மன்னிய வினையின்  நிமித்தமாம்.
எனவே இவையும்  அவையலங்கடை, மெய்ப்பாட்டிற்குரிய பொருளாதற்குள
என்பதாம்.
 

'நலத்தக  நாடின்'  என்றது   இலக்கணநெறி   பொருந்த   ஆராயின்
என்றவாறு.   அஃதாவது   பசியடநிற்றல்,   ஐயஞ்  செய்தல்   போல்வன
புறப்பொருள்   பற்றிய   ஒழுகலாற்றிற்கும்  ஏற்ப   நிற்பினும்  ஆண்டுப்
பசியடுதல்,  வறுமை   காரணமாக   நிற்கும்;   ஈண்டுக்   காதலுணர்வால்
உண்ணுதற்கொவ்வா உளநிலை காரணமாக நிற்கும் என ஓர்ந்து  உணர்தல்
வேண்டு   மென்பதாம்.   அங்ஙனம்   நாடுதல்   மேல்வருவனவற்றிற்கும்
ஒக்குமாதலின்  "நலத்தக  நாடின்"  என்பதை   இடைநிலை  விளக்கமாகக்
கொள்க.
 

கலக்கமும் நலத்தக நாடின், என மாறிக்  கூட்டிக்  கொள்க.  கலக்கமும்
என்னும்  உம்மையை   ஏனைச்  செவ்வெண்களோடும்  கூட்டிக்  கொள்க.
கலக்கம் நடுவணைந்தினைக்கண் பெருந்திணைப் பகுதியாக  வந்து  நிகழும்
என்பதனை அறிவிக்கப் பிரித்துக் கூட்டப்பட்டதென்க.
 

இவற்றையெல்லாம் புணர்ச்சி நிமித்தமாக  வலிந்துரை கூறி விளக்குவார்
பேராசிரியர்.  அவர்  கருத்துச்  சொற்பொருளமைதிக்கும் நூல்  நெறிக்கும்
பொருந்தாமை உணரப்படும்.
 

1. இன்பத்தை வெறுத்தலாவது :தலைவன்    பிரிவு     காரணமாக
இன்பத்திற்குரிய பொருள்களை  வெறுத்தல், இன்பம் - ஆகுபெயர். அவை
தென்றல், மாலைப்பொழுது, நிலவு, யாழ், குழல், சாந்து, பூ முதலியவையாம்.
 

எ - டு :

வன்புறை இன்சொல் நன்பல பயிற்றும்

நின்வலித் தமைகுவன் மன்னோ அல்கல்

புன்கண் மாலையொடு பொருந்திக் கொடுங்கோற்