| கல்லாக் கோவலர் ஊதும் |
| வல்வாய் சிறுகுழல் வருத்தாக் காலே |
(அக-74) |
எனவரும். இஃது அவலத்திற்குப் பொருளாக அமையும். |
2. துன்பத்துப் புலம்பலாவது : பிரிவாற்றாமையான் படருற்று மெலிந்து வருந்துதல். |
| எ - டு : | காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் |
| யாமத்தும் யானே உளேன் |
(குறள்-1167) |
எனவரும். இதுவும் அழுகைக்குப் பொருளாக வரும். |
3. எதிர்பெய்து பரிதலாவது :காதலர் தம் காதன் மிகுதியான் தோன்றும் உரு வெளிப்பாடு கண்டு இரங்குதல். |
| எ - டு : | வாரா தாயினும் வருவது போலச் |
| செவிமுத லிசைக்கும் அரவமொடு |
| துயின்மறந் தனவால் தோழியெங் கண்ணே |
என்பது தலைவன் உரு வெளிப்பாடு கண்டு தலைவி இரங்கியது. |
| வானம் பாடி வறங்களைந் தானாது |
| அழிதுளி தலைஇய புறவிற் காணவர |
| வானர மகளோ நீயே |
| மாண்முலை யடைய முயங்கி யோயே |
(ஐங்-418) |
என்பது தலைவி உரு வெளிப்பாடு கண்டு தலைவன் இரங்கியது. இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
4. ஏதமாய்தலாவது : கூட்டத்திற்கு இடையூறானவற்றை எண்ணி இனைதல். |
அவை குறித்த பருவத்து வாராது மறந்துறைவர் கொல், ஆற்றிடைத் தலைவற்கு ஊறு நேருங்கொல், ஏதிலர் வரைவு தமர் நேர்வர்கொல் என்பன முதலியனவாம். |
| எ - டு : | . . . . . . . . மறத்தனர் |
| கொல்லோ தாமே களிறுதன் அன்னோர், |
| உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது |
| ...... ...... ...... ...... ...... ....... ....... ...... ........ ....... ...... ....... |
| அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் |
| அத்த நீளிடை அழப்பிரிந் தோரே |
(குறு-307) |
என்பது, தலைவன் பிரிந்த வழி, மறப்பன் கொல்லோ எனவும் ஆற்றினது ஊறு எண்ணியும் தலைவி வருந்தியது. இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |