| எ - டு : | பொய்த்தற் குரியனோ பொய்த்தற் குரியனோ |
| அஞ்சலோம் பென்றாரைப் பொய்த்தற் குரியனோ |
| குன்றகல் நல்நாடன் வாய்மையிற் பொய்தோன்றின் |
| திங்களுள் தீத்தோன் றியற்று |
(கலி-41) |
எனத் தோழி தலைவன் பெருமைகூறிப் பின்னர்க், |
| கூடி அவர்திறம் பாடஎன் தோழிக்கு |
| வாடிய மென்றோளும் வீங்கின |
| ஆடமை வெற்பன் அளித்தக்கால் போன்றே |
(கலி-43) |
எனத் தலைவியின் உவப்பினைத் தோழி விளக்கியவாறு கண்டு கொள்க. இவை இரண்டும் உவகைக்குப் பொருளாக அமையும். |
20. கலக்கமாவது :ஆற்றாமையான் மதிதிரிந்து சொல்லுதற்காகாதன சொல்லுதலும் செய்தற்கொவ்வாதன செய்தலுமாம். |
| எ - டு : | மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர் |
| நலிதரும் காமமும் கௌவையும் என்றிவ் |
| வலிதின் உயிர்காவாத் தூங்கியாங் கென்னை |
| நலியும் விழும மிரண்டு |
(கலி-142) |
எனவும் |
| கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று |
| நாடுவேன் கண்டனென் சிற்றிலுள கண்டாங்கே |
| ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய |
| காணான் திரிதருங் கொல்லோ மணிமிடற்று |
| மாண்மலர்க் கொன்றை யவன் |
(கலி-142) |
எனவும் வரும். இஃது அழுகைக்கும் இளிவரலுக்கும் பொருளாக அமையும். இவ் இருபது பொருளும் பெரும்பான்மையும் தலைவிக்குரியவாக நிகழும். சிறுபான்மை தலைவற்கும் ஏற்கும். ஏற்பவை மேலே கூறப்பட்டன. |
| சூ. 272 : | முட்டுவயிற் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல் |
| அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல் |
| தூது முனிவின்மை துஞ்சிச் சேர்தல் |
| காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென்று |
| ஆயிரு நான்கே அழிவில் கூட்டம் |
(23) |
க - து : | கற்பொழுக்கத்திற்கு அடிப்படையாய் அதற்குமுன் னிகழும் வரைவிற்குரிய கிளவிகள் பற்றிவரும் உணர்வும் செயலு மாகியவற்றைத் தொகுத்து அவை மேற்கூறிய மன்னிய வினையின் நிமித்தமாய் எண்வகை மெய்ப்பாடுகட்குப் பொருளாக வரும் என்கிறது. |