பொருள் :முட்டுவயிற்கழறல் முதலாகக் கட்டுரையின்மை யீறாகச் சொல்லப்பட்ட பொருள் எட்டும் அழிவில் கூட்டத்திற்கு நிமித்தமாம். எனவே இவையும் அவையலங்கடை மெய்ப்பாட்டுப் பொருளாதற்கு உள என்றவாறு. |
இவற்றின் சொற்பொருளை நோக்கின் இவை எட்டும் வரைந்து எய்தும் அழிவில் கூட்டத்திற்கு (கற்பிற் புணர்ச்சி) ஏதுவாவனவன்றி அழிவில் கூட்டமாதற்கு ஏலாமையான் இவையும் மேலன போல நிமித்தம் என்பது நன்கு புலனாகும். ஆதலின் மன்னிய வினைய நிமித்தம் என்பதனை அதிகாரத்தாற் கொண்டு பொருள் உணர்ந்து கொள்க. என்று என்பது எண்ணிடைச் சொல். ஏகாரம் இசைநிறை. |
'பின்வரும் தெய்வமஞ்சல்' முதலிய பத்தும் "செப்பிய பொருளே" என்பதனான் அவை அழிவில் கூட்டத்திற்குரியவை என இச்சூத்திரஇறுதியொடு மாட்டெறிந்து கூறுவார் ஆசிரியர். அம்மாட்டேறு இனிது பொருள்படற் பொருட்டு இச்சூத்திரத்து அழவின் கூட்ட நிமித்தம் என்னாமல் வாளா அழிவில் கூட்டம் எனக் கூறினார். கூறி, நிமித்தம், என்பதனை அதிகாரத்தாற் கொள்ள வைத்தார் என அறிக. |
1. முட்டுவயிற் கழறலாவது :தலைவி இற்செறிப்புறுதலானும் தலைவன் வருந்தொழிற்கு அருமைப்பாடுறுதலானும் கூட்டத்திற்கு முட்டுப்பாடெய்திய வழித் தலைவி கழற்றுரை கூறுதல். |
"நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் கன்முதிர் புறங் காட்டன்ன பன்முட்டின்றால் தோழிநங்க ளவே" (அகம்-122) எனத்தலைவன் முட்டுப்பாடுற்ற வழி. |
| | "தண்ணந் துறைவற் காணின்-முன்னின்று |
| கடிய கழறல் ஓம்புமதி, தொடியோள் |
| இன்ன ளாகத் துறத்தல் |
| நும்மிற் றகுமோ என்றனை துணிந்தே" |
(குறு-296) |
எனத் தோழியைக் குறிப்பாற் கழறுமாறு கூறுதலைக்கண்டு கொள்க. இஃது வரைவுகடாதற் குறிப்பாதலையும் அதனான் இது வரைந்தெய்தும் கூட்டத்திற்கு நிமித்தமாதலையும் அறிக. இது வெகுளிக்குப் பொருளாக அமையும். |
2. முனிவுமெய்ந் நிறுத்தலாவது : தலைவன் வரைவிற்குரியன புரியாமல் களவு நீட்டித்தலின் அவ்வெறுப்புத் தன் மேனியிற் புலப்படத் தோழியை வற்புறுத்துங் குறிப்பொடு நிற்றல். |