322மெய்ப்பாட்டியல்

உள்ளினும் உள்ளம் வேமே உள்ளாது 

இருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி 

வான்றோய் வற்றே காமம் 

சான்றோ ரல்லர் யாம்மரீஇ யோரே  

(குறு-102)
 

எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

8. கட்டுரையின்மையாவது :  துஞ்சிச்  சேர்ந்து கையறவுற்ற  நிலையில்
பிறரைக்   கழறிஉரைக்கும்  மன  எழுச்சியின்றி   வாய்  வாளாதிருத்தல்.
கட்டுரைத்தல் - கழறியுரைத்தல்.
 

எ - டு :

.......................... துறைவன் 

குறியா னாயினும் குறிப்பினும் பிறிதொன்று 

அறியார்க் குரைப்பலோ யானே எய்தவிப் 

பணையெழில் மென்றோள் அணைஇய அந்நாள் 

பிழையா வஞ்சினம் செய்த 

களவனும் கடவனும் புணைவனு மவனே 

(குறு-318)
 

எனவரும். இதன்கண் அறியார்க்குரைப்பலோ என்றது காண்க.
 

இது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

இதற்கு    உரைமறுத்திருத்தல்      எனப்     பொருள்     கூறுவர்
உரையாசிரியன்மார்.     அது    கருத்தாயின்    ஆசிரியர்  உரையாமை,
உரையாடாமை,   உரைமறுத்திருத்தல்    என்றாற் போலக்   கூறுவரன்றிக்
கட்டுரை   என இங்ஙனம்   அடைகொடுத்துக்    கூறார் என்க.   மேலும்
உரையாடாமை   என்பது மெய்ப்பாட்டுப்   பொருளாதற்குச்  சிறவாமையும்
ஓர்ந்து கொள்க.
 

சூ. 273 :

தெய்வ மஞ்சல் புரையறந் தெளிதல்

இல்லது காய்தல் உள்ள துவர்த்தல் 

புணர்ந்துழி யுண்மைப் பொழுதுமறுப் பாக்கம் 

அருள்மிக உடைமை அன்புதொக நிற்றல் 

பிரிவாற் றாமை மறைந்தவை யுரைத்தல் 

புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇச் 

சிறந்த பத்தும் செப்பிய பொருளே 

(24)
 

க - து :

புகுமுகம்   புரிதல்    முதலாகக்   கட்டுரையின்மை  யீறாகக்
களவிற்கும்   வரைவிற்கும்   நிமித்தமாகிய   பொருள்களைத்
தொகுத்துணர்த்தி,  இச்சூத்திரத்தான் வரைந்தெய்தும் அழிவில்
கூட்டமாகிய     கற்     பொழுக்கத்திற்கு      உரியவற்றுள
சிறப்புடையவற்றைத்   தொகுத்து   இவையும்   மேலனபோல
மெய்ப்பாடு தோன்றுதற்குரிய பொருளாகும் என்கின்றது.