யாக்கத்துள் தெய்வஞ் சுட்டுவனவாகவும் கூறப்பெற்ற தெய்வங்களைத் தலைவி அஞ்சுதலாம். பரவுதல், வேண்டல் என்றாற் போலக் கூறாமல் அஞ்சுதல் எனக் கூறியமையான் தெய்வம் என்றது சிறுதெய்வங்கள் என்பது பெறப்படும். |
| எ - டு : | "சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக் |
| கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ" |
| "முளிமுதல் மூழ்கிய வெம்மைதீர்ந் துறுகென |
| வளிதரு செல்வனை வாழ்த்தவும்இ யைவதோ" |
(கலி-16) |
| "அச்சாறாக உணரிய வருபவன் |
| பொய்ச்சூளஞ்சிப் புலவே னாகுவல்" |
(கலி-75) |
என வரும். பிறவும் சான்றோர் செய்யுட்களுள் கண்டு கொள்க. இஃது அச்சமென்னும் மெய்ப்பாட்டிற்குப் பொருளாக அமையும். |
2. புரையறந் தெளிதலாவது : இல்லற வாழ்க்கை என்பது கொண்டானை உவப்பித்தலும் மக்கட்பேறெய்துதலுமாகிய இவையேயன்றி இயல்புடை மூவர்க்குத் துணைபுரிதலும் ஐம்புலத்தாறு ஓம்பலும் பிரிவிடையாற்றலும் பிறவும் உயர்ந்த அறமெனத் தெளிந்து ஒழுகுதலாம். |
| எ - டு : | விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூ ளஞ்சவும் |
| அரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவும் |
| ஆங்கவிந் தொழியுமென் புலவி தாங்காது |
| அவ்வவ் விடத்தான் அவையவை காணப் |
| பூங்கண் மகளிர் புனைநலஞ் சிதைக்கும் |
| மாய மகிழ்நன் பரத்தைமை |
| நோவென் தோழி கடன்நமக் கெனவே |
(கலி-75) |
| ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி |
| அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் |
| கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக் |
| கொடுத்த தந்தைக் கொழுஞ்சோ றுள்ளாள் |
| ஒழுகுநீர் நுணங்குறல் போலப் |
| பொழுது மறுத்துண்ணும் சிறுமது கையளே |
(நற்-110) |
எனவரும். இஃது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். |
3. இல்லது காய்தலாவது : தன்வயின் உரிமையான் எழுங் காதல்மிகுதியான் மனையறக்கிழத்தி தலைவன் தவறு புரியா வழியும் அவன்பால் தவறு கற்பித்து ஊடல் கொண்டு சினத்தல். |