326மெய்ப்பாட்டியல்

6. அருள்மிக    உடைமையாவது :    தலைவனது    புறத்தொழுக்கம் முதலியவை பற்றி முனியாது  அவனது தலைமைப்  பாட்டினைப்   போற்றி ஒழுகல்.
 

எ - டு :

............. எல்லா, புலப்பென்யான் 

என்பேன் மன்அந் நிலையே அவற்காணின் 

கலப்பென் என்னுமிக் கையறு நெஞ்சம் 

(கலி-67)
 

எனவரும். இது தலைவன் மாட்டு அருள்மிக்கது. 
 

"நாயுடைமுதுநீர்" என்னும் அகப்பாட்டினுள் 

களவுடம் படுநரிற் கவிழ்ந்து நிலங்கிளையா 

நாணி நின்றோள் நிலைகண் டியானும் 

பேணி னெனல்லனோ 

(அகம்-16)
 

என்பது  பரத்தைமாட்டு அருள்மிக்கது. பிறவும்  இவ்வாறு  வருவன கண்டு
கொள்க. இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.
 

7. அன்புதொக    நிற்றலாவது :  புரையறந்தெளிந்த அறிவினளாயினும்
புலவி, புணர்ச்சி உவகையைத்   தோற்றுவித்தலின்   தலைவன்   மாட்டுச்
செல்லும் தன் பேரன்பினைத் தலைவி அவற்குப் புலப்படாது மறைத்தல்.
தொகுதல் - மறைதல்.
 

எ - டு:

என்னைநீ செய்யினும் உரைத்தீ வாரில் வழி 

முன்னடிப் பணிந்தெம்மை உணர்த்திய வருதிமன் 

நிறைதொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ளக் 

கரையிடைக் கிழிந்த நின் காழகம் 

வந்துரையாக்கால் 

(கலி-73) 
 
எனவும்.
 

அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி 

மணிபுரை செவ்வாய், நின்மார்பகம் நனைப்பதால் 

தோய்ந்தாரை அறிகுவேன் யான்எனக் கமழும்நின் 

சாந்தினாற் குறிகொண்டாள் சாய்குவள் அல்லளோ 

(கலி-79)
 

எனவும் வரும். இதுவும் உவகைக்குப் பொருளாக வரும்.
 

இதற்கு   இல்லறத்தின்மேற்  பெருகிய  விருப்பினானே களவுக்காலத்து
விரிந்த அன்பெல்லாம்  ஒருங்குகூடி    நிற்றல்   என்பார்   பேராசிரியர்.
அப்பொருள்  மெய்ப்பாட்டுப்  பொருளாதற்குச் சிறவாமையானும். இங்ஙனம்
புலவியாற் கூறும் பொருள்பற்றி  மெய்ப்பாடு  தோன்றுதல் இன்றியமையாச்
சிறப்பினது ஆகலானும், மேல் அருள்மிக உடைமை எனக்