மெய்ப்பாட்டியல்

கூறிப்   பின்னும்   அன்பு  மிக  உடைமை  எனல் ஒருவாற்றான் கூறியது
கூறலாக அமையுமாகலானும் அஃது ஆசிரியர் கருத்தாகாமை தெரியலாம்.
 

8. பிரிவாற்றாமையாவது : தலைவன் தன்  தலையாய   கடமை  பற்றிப்
பிரிதலை    ஆற்றியிருத்தல்    முல்லை   சான்ற   கற்பொழுக்கத்திற்குச்
சிறப்புடையதெனினும்  தலைவி தன்   கழிபெருங்   காதல்    காரணமாக
ஆற்றாமை தோன்ற நிற்றல்.
 

எ - டு :

"நெஞ்சு நடுக்குறக் கேட்டும்" என்னும் 

பாலைக் கலியுள் 

"நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்று 

செய்பொருள் முற்றும் அளவென்றார் ஆயிழாய் 

தாமிடை கொண்ட ததுவாயின் தம்மின்றி 

யாமுயிர் வாழும் மதுகை இலேமாயின் 

தொய்யில் துறந்தார் அவரெனத் தம்வயின் 

நொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு 

போயின்று சொல்லென் உயிர் 

(கலி-24)
 

எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

9. மறைந்தவை  உரைத்தலாவது : சென்ற காலத்து நிகழ்ந்தவற்றை  ஓர்
ஏதுவைப்பற்றி எடுத்துப் பேசுதல்.
 

எ - டு :

மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி 

முயங்கல் விடாஅல் இவையென மயங்கி 

யான்நேரம் என்னவும் ஒல்லார் தாம்மற்று 

இவைபாராட்டிய பருவமும் உளவே-இனியே 

புதல்வற் றடுத்த பாலொடு தடைஇ 

திதலை யணிந்த தேங்கொள் மென்முலை 

நறுஞ்சாந் தணிந்த கேழ்கிள ரகலம் 

வீங்க முயங்கல் யாம்வேண் டினமே 

தீம்பால் படுதல் தாமஞ் சினரே  

(அகம்-26)
 

இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

10. புறஞ்சொல் மாணாக்கிளவியாவது : புறத்தார் கூறும் புன்சொல்லைப்
பொறாது வெறுத்தலேயன்றித் தானும் புறஞ் சொல்லற்கு ஒவ்வாது நிற்றல்.
 

எ - டு :

இது மற்றெவனோ தோழி துனியிடை 

இன்னர் என்னும் இன்னாக் கிளவி 

..... ...... ...... ....... ......... ....... ஊரன்