| திருமனைப் பல்கடம் பூண்ட பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே |
(குறு-181) |
என்பது தோழி புறங்கூறுதலைத் தலைவி பொறாத கிளவி. |
"மணிமருள் மலர" என்னும் அகப்பாட்டினுள் |
(அக-236) |
...... ..... ....... ........ ...... 'ஊரன் காமம் பெருமை யறியேன் நன்றும் உய்ந்தனென் வாழி தோழி ...... ....... ....... ....... ....... ஆதிமந்தி போல ஏதம் சொல்லிப் பேது பெரிதுறலே' |
என்பது தலைவி தான் புறங்கூறலைப் பொறாத கிளவி. |
இது வெகுளிக்குப் பொருளாக அமையும். பெருமிதமாதற்கும் ஒக்கும். இவற்றுள் ஏற்பன தலைவற்கும் பொருளாக வரும். |
அளிநிலை பொறாஅது (அகம்-5) என்னும் அகப்பாட்டினுள் |
தூநீர்ப் பயந்த துணையமை பிணையல் மோயினள் உயிர்த்த காலை, மாமலர் மணியுரு விழந்த அணியழி தோற்றம் கண்டே கடிந்தனம் செலவே" |
என்பது தலைவன் புரையறந் தெளிதலாம். |
வங்காக் கடந்த செங்காற் பேடை எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது குழலிசைக் குரல குறும்பல அகவும் குன்றுறு சிறுநெறி அரிய என்னாது மறப்பருங் காதலி ஒழிய இறப்பல் என்பதீண்டு இளமைக்கு முடிவே |
(குறு-151) |
என்பது தலைவன் பிரிவாற்றாமையாம். |
"உழுந்து தலைப்பெய்த" என்னும் (அகம்-86) அகப்பாட்டினுள் தலைவன் மறைந்தவை உரைத்தல் வந்தவாறு காண்க. |
| சூ. 274 : | பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே |
(25) |
க - து : | 'ஒத்த கிழவனும் கிழத்தியும், (கள - 2) என்ற ஒப்புமையை விதந்து கூறுகின்றது. |