அவாப்போ லகன்றதன் அல்குல் மேல் சான்றோர் |
உசாரப்போல உண்டே நுசுப்பு |
(பேரா-மேற்) |
இவற்றுள் உவமங்கள் கழியப் பெரிதும் சிறிதுமாகக் கூறியிருப்பினும் அவர் ஒரு பொருளைப்பற்றி நிகழுமிடத்து அஃது அதன் அளவிற்றாக நிற்கும். உசா மிகநுணுகிச் சென்று இறுதியாக ஒன்றைத் தேர்ந்து நிற்கும். ஆதலின் அக்குறிப்புக்களான் பொருள்களின் அளவைகள் புலப்படுதலின் அவை சிறப்புற்றீரா நெறிப்பாடுடையவாய்க் கொள்ளப்படும். இவ்வாறன்றி |
இந்திரனே போலும் இளஞ்சாத்தான் சாத்தற்கு |
மந்தரமே போன்றிலங்கும் மல்லாகம்-மந்தரத்துத் |
தாழருவி போன்றுளது தார்மாலை அம்மாலை |
ஏழுலகும் நாறு மிணர் |
[இளம்-மேற்] |
என்றாற் போல்வன ஓரேதுவுமின்றிப் பெருமைகள் இறப்பக் கூறப்பட்டமையான் நெறிப்பாடின்றி வழுப்பட வந்தனவாம். |
வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழாம் |
எள்ளி இரிவதுபோ லெம்மருங்கும்-வள்ளற்கு |
மாலார் கடல்போல மண்பரந்த வாட்டானை |
மேலாரும் ஏலார் விரைந்து |
[இளம்-மேற்] |
என்பது நெறிப்பாடின்றி இறப்ப இழிந்து வந்துவழுவினவாம். |
| சூ. 287 : | அவைதாம் |
| அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப |
| என்ன மான என்றவை எனாஅ |
| ஒன்ற ஒடுங்க ஒட்ட ஆங்க |
| வென்ற வியப்ப என்றவை எனாஅ |
| எள்ள விழைய விறப்ப நிகர்ப்பக் |
| கள்ளக் கடுப்ப ஆங்கவை எனாஅக் |
| காய்ப்ப மதிப்பத் தகைய மருள |
| மாற்ற மறுப்ப ஆங்கவை எனாஅப் |
| புல்லப் பொருவ பொற்பப் போல |
| வெல்ல வீழ ஆங்கவை எனாஅ |
| நாட நளிய நடுங்க நந்த |
| ஓடப் புரைய என்றவை எனாஅ |
| ஆறா றவையும் அன்னவை பிறவும் |
| கூறுங் காலைப் பல்குறிப் பினவே |
| (11) |