358உவமவியல்
       17.இளிதேர் தீங்குரல் இசைக்கு
மத்தம்
(அகம்-33)
18.நூல்நெறி நுணுங்கிய கால் நவில் புரவி(அகம்-314)
19.பூநாறு செவ்வாய் சிதைத்த
சாந்தமொடு
(நற்-250)
20.வௌவல் காரிருள் மயங்கு மேனியன்(பரி-15)
21.ஒருதிறம் பண்ணார் தும்பி பரந்திசை யூத(பரி-17-12)
22.மின்னீன்ற விளங்கிணர்(பரி-8-14)
23.பொருகயல் முரணிய உண்கண் (குறு-250)
24.முகை வாய்த்த முலைபாயக்
குழைந்த நின்தார்
(கலி-68)
25.தண்டளிர் வௌவும் மேனி(ஐங்-38)
26.இலங்குமுத் துறைக்கும் எயிறு
கெழுதுவர்வாய்
("-185)
27.கார்கருதி வார் முரசமார்க்குங்(பு.வெ.மா-103)
 

இங்ஙனம்   இவை   தொழில்   முதனிலைச்சொல்  முதலிய பல்வேறு
குறிப்பினவாய்   அமைந்து  பொருளொடு   உவமத்தைத்   தொடர்புறுத்தி
விளக்கி ஒப்பில் வழியாற் பொருள் செய்து வருமென்க. 

ஆசிரியர்    இவ்வுவமச்   சொற்களை  (உருபுகளை) ஒப்பில் வழியாற்
பொருள்   செய்குந  எனச் சொல்லதிகாரத்துள்   இடைச்சொற்களின்  ஒரு
கூறாக ஓதினார். அவற்றையே ஈண்டு உவமம் என்னும் குறியீட்டாற் சுட்டிக்
கூறினாரென அறிக. 

இவற்றை   உவமஉருபு  என  இடைக்கால நூலார் வழங்குவர். உவமம
எனினும்  உவமஉருபு  எனினும்  உவமச்சொல்  எனினும்  உவமவாய்பாடு
எனினும் ஒக்கும்.  ஆயினும்   இவற்றை  வேற்றுமை உருபுகளைப் போலக்
கருதற்க. வேற்றுமை  உருபுகள்  திணை, பால்,  இடங்கட்குப் பொதுவாய்ப்
பெயரின் பின்னர்ப் பெயரொடு இணைந்து வரும். தனித்து வாரா. தனித்துப்
பொருள் பயவா.  உவம  உருபுகள்  பல்வேறு  குறிப்பினவாய்  அமைந்து
தத்தங்  குறிப்பிற்  பொருள் செய்வனவாக   வரும். அதனான்  இவற்றைத்
தத்தங் குறிப்பிற் பொருள்   செவ்வனவாக வரும்  இடைச்சொற்களின் பின்
வைத்து ஆண்டு ஓதினார். தத்தங் குறிப்பிற் பொருள்  செய்யும் மற்று, பிற,
தஞ்சம் முதலிய  இடைச்சொற்கள்  பெயர்த்தன்மையுற்றுப் பொருளுணர்த்தி
நிற்குமாறு     போல    உவம       உருபுகளாகிய    இடைச்சொற்கள்
வினைத்தன்மையுற்றுப் பொருளுணர்த்தி வருமென அறிக.