362உவமவியல்

 

2.பளிங்      கத்தன்ன    பல்காய்
நெல்லிமோட்டிரும்        பாறை
ஈட்டுவட்டேய்ப்ப
(அகம்-5)
3.வேய்மருள் பணைத்தோள் நெகிழ(குறு-318)
4.உரல்புரை பாவடி(கலி-21)
5.முத்துடைவான்கோடொட்டியமுலைமிசை(இளம்-மேற்)

6.பாம்புரு வொடுங்க வாங்கிய நுசுப்பின்(")

7.செந்தீ ஒட்டிய வெண்சுடர்ப் பருதி (")

8.பரங்குன் றிமயக் குன்றம் நிகர்க்கும்(பரிபா-8)
 

எனவரும். இவை எட்டும் மெய்யுவமத்தின் பாலானமைக்குக்  காரணம் :
கடுத்தல் என்பது   ஐயுறுதலாகலான்    அஃது   பொருளுள்  ஒன்றனைத் துணியாமை   பற்றி  வருதலின் மெய்யுவமத்திற்குச் சிறந்ததாயிற்று. ஏய்ப்ப
என்பது    எய்த்தல்   என்பதன்   நீட்சியாகும்.   ஏய்த்தல்   இளைத்தற்
பொருட்டாகலின் வடிவுக்கு    ஏற்றதாயிற்று.   [பொருந்துதல்    என்னும் பொருளில்     வரும்    ஏய்தல்    வேறு; இது  வேறு. ஏய்தல் என்பது எச்சமாகவரின்   'ஏய'   என   வரும்]    மருளுதல்   என்பது ஒன்றைப்
பிறிதொன்றாகக் கருதும்   மயக்கமாகலின் இதற்குச்   சிறந்ததாயிற்று. புரை
என்பது   உயர்பு   ஆகலானும்,   ஒடுங்குதல்  என்பது ஒன்று ஒன்றனுள்
அடங்குதலாகலானும் ஒட்டுதல் என்பது நீக்குதல் பொருட்டாகலானும்  நிகர்
என்பது அளவைப்  பொருட்டாகலானும் இவையும் வடிவிற்குச் சிறந்துரிமை
பெறலாயின.
 

சூ.292:

போல மறுப்ப ஒப்பக் காய்த்த

நேர வியப்ப நளிய நந்தவென்று 

ஒத்துவரு கிளவி உருவி னுவமம் 

(16)
 

க - து:
 

உருவுவமத்திற்கு ஏற்கும் உவமச்சொற்கள் இவை என்கின்றது.
 

பொருள் :போல  முதலியவாகச்   சொல்லப்படும்  ஒத்துவரு  கிளவி
எட்டும் உருவுவமத்திற்குரிய உவமச்சொற்களாம். செவ்வெண்ணின்  தொகை விகாரத்தாற்றொக்கது.
 

உருவுவமம் ஏனைய மூன்றனையும் போலாது  நிறம்,  குணம்,   சுவை, அளவு   முதலிய   பற்றி வருதலின் அவற்றிற்கெல்லாம் இவை பொதுவாக
ஓதப்பட்டமையான் அவை  யாவற்றிற்கும்  இவை பொருந்திவரும் என்பார்
ஒத்துவரு கிளவி என்றார்.
 

1. தன்சொல்  லுணர்ந்தோர்   மேனி    பொன்போற்   செய்யும் ஊர்
கிழவோனே  (ஐங்-41)  என்பது வண்ணம் பற்றி  வந்தது.  நாலூர்க்கோசர்
வாய்மொழி போல வாயாகின்றே தோழி