14களவியல்

இருவர்க்கும்    உரியவாகக்   கூறப்படும் ஒப்புமைகளுள் ஆண்மையும்
ஒன்றாகலின்    அவ்ஆளுமைத்திறன்    தலைவிக்குரியதாக  நிகழுமிடத்து
அச்சம் முதலாய இயல்புகள் முந்துறாது அடங்கி நிகழுமென்க.  வேண்டாப்
பிரிவின் கண்ணும் ஊடற் கண்ணும் சில முந்துறுதலும் சில    பிந்துறுதலும்
சான்றோர் செய்யுட்களான் அறிந்துகொள்க.
 

இவை  இரண்டு சூத்திரங்களானும் கூறப்பெற்ற தலைமக்கள் இயல்புகள்,
மேல் வரும்  ஒழுகலாறுகட்கு அடிப்படையான    இலக்கணக்    கூறுகள்
எனக்கருதாமல் இவை உள்ளப் புணர்ச்சிக்கும்      மெய்யுறுபுணர்ச்சிக்கும்
ஏதுவாகக் கூறப் பெற்றனவாகக் கொண்டு  உரையாசிரியன்மார் மிகைபடவும்
மற்றொன்று விரித்தும் நூல்நெறிக்கு ஒவ்வா விளக்கம் கூறிச் சென்றனர்.
 

சூ. 101 :

வேட்கை ஒருதலை யுள்ளுதல் மெலிதல்

ஆக்கஞ் செப்பல் நாணுவரை யிறத்தல்

நோக்குவ வெல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கம் சாக்கா டென்றச்

சிறப்புடை மரபினவை களவென மொழிப

(9)
 

க - து :

பாலதாணையாற்    கண்ட    கிழவனும் கிழத்தியும் குறிப்பறிந்து
உள்ளம்     ஒத்தவழிக்      களவொழுக்கத்திற்கு   ஏதுவாகத்
தலைமக்களிடத்துக் கிளர்ந்தெழும் உணர்வுகள்      இவையென
அவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது.
 

இஃது இருவர்க்கும் உரிய பொது இலக்கணமாயினும் தலைவியது இயல்பு
கூறிய அதிகாரத்தைச் சார அதன்பின் வைத்துக்   கூறியதனான்  இவற்றுள்
பெரும்பான்மையும் தலைமகளிடத்தே சிறப்பாக நிகழும்   எனக்   கொள்க.
அவ்வாறாதலைச் சான்றோர் இலக்கியங்களான் அறிக.
 

பொருள : (1) வேட்கை    என்பது,    ஒருவர்ஒருவரை    அடைதல்
வேண்டுமென்னும் ஆரா   விருப்பமாம் (2)   ஒருதலையுள்ளுதல்  என்பது,
ஒருவரை    ஒருவர்     இன்றியமையாதவர் என உலையா   உறுதியொடு
இடையறாது  கருதுதலாம்.    ஒருதலை    என்பதனை இடை விளக்காகக்
கொண்டு   நச்சினார்க்கினியர்   ஒருதலை வேட்கை என வேட்கையொடும்
கூட்டிப்  பொருள் கூறுவார். வேட்கை என்னும் சொல்லே அப்பொருளைத்
தருமாகலின்    அங்ஙனம்    கூறுதல்   வேண்டா  கூறலாகும் என்க. (3)
மெலிதல் என்பது, அங்ஙனம் உள்ளுதலான் ஊண்   உறக்கத்திற்   சிந்தை
செல்லாமல் இளைத்தல் (4) ஆக்கஞ்செப்பல் என்பது,