| மீனார் குருகின் கானலம் பெருந்துறை |
| வெள்வீத் தாழை திரையலை |
| நள்ளென் கங்குலும் கேட்கும் நின்குரலே |
(குறு-163) |
இது நோக்குவவெல்லாம் அவையே போறல். |
| பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன |
| நீர்உறை மகன்றிற் புணர்ச்சி போலப் |
| பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு |
| உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து |
| இருவே மாகிய உலகத்து |
| ஒருவே மாகிய புன்மைநாம் உயற்கே |
(குறு-57) |
இது மயக்கம். |
| மாவென மடலும் ஊர்ப பூவெனக் |
| குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப |
| மறுகின் ஆர்க்கவும் படுப |
| பிறிதும்ஆகுப காமங்காழ் கொளினே. |
(குறு-17) |
இது தலைவன் மடற்கூற்று. இதன்கண் சாக்காட்டுணர்வு வெளிப்படுதலைக் கண்டுகொள்க. பிறவும் சான்றோர் செய்யுட்கண் கண்டு கொள்க. |
| சூ. 102 : | முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல் |
| நன்னய முரைத்தல் நகைநனி யுறாஅ |
| அந்நிலை யறிதல் மெலிவு விளக்குறுத்தல் |
| தந்நிலை யுரைத்தல் தெளிவகப் படுத்தலென்று |
| இன்னவை நிகழும் என்மனார் புலவர் |
(10) |
க - து : | இயற்கைப் புணர்ச்சி முதலாகத் தோழியிற் புணர்வு ஈறாக நிகழும் களவொழுக்கத்தின்கண், நாணும் மடனும் பெண்மைய வாகலின் தலைவி தன் உணர்வுகளைக் குறிப்பினும் இடத்தினும் புலப்படுத்தலன்றிக் கூற்று மொழியாற் புலப்படுத்தல் பெரிதும் இன்மையான் பெருமையும் உரனுமுடைய தலைவன் கூற்று மொழியாற் புலப்படுத்தும். அந்நெறி தோன்றக் கூற்றும் செயலுமாக நிகழ்வனவற்றைத் தொகுத்து கூறுகின்றது. |
அஃதாவது மெய்தொட்டுப் பயிறல் முதலாகக் களஞ்சுட்டுக் கிளவி ஈறாகப் பின்னர்க் கூறப்பெறும் தலைமக்கள் ஒழுகலாறுகளுள் கூற்று வகையானமையும் பொருள்கள் இவை என்றவாறு. |
முன்னிலையாக்கல் முதலிய கூற்றுமொழிப்பகுதிகள் தலைவியொடு தலைவனும், தலைவி தலைவனொடு தோழியும், தோழியொடு செவிலியும் கூற்று நிகழ்த்துமிடத்தும் ஏனை அகத் |