| ஒம்புமதி வாழியோ வாடை! |
(குறுந்-235) |
இது தலைவன் வாடையை முன்னிலைப்படுத்தியது. |
| குணகடற் றிரையது பறைதபு நாரை |
| ..... ..... ...... ...... ...... ...... ....... ....... |
| நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே |
(குறு-128) |
இது தலைவன் தன் நெஞ்சினை முன்னிலைப் படுத்தியது. பிறவும் சான்றோர் செய்யுட்கண் கண்டுகொள்க. |
2) சொல்வழிப்படுத்தல் என்பது : முன்னிலையாக்கிக் கொண்ட மாந்தரையும் நெஞ்சு முதலாயவற்றையும் தன் கருத்தின்வழி ஒழுகவேண்டுதலாம். |
| கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி |
| காமஞ் செப்பாது கண்டது மொழிமோ |
| பயலியது கெழீஇய நட்பின் மயிலியல் |
| செறியெயிற் றிரிவை கூந்தலின் |
| நறியவும் உளவோநீ அறியும் பூவே |
(குறு-2) |
இது தலைவன் தும்பியைச் சொல்வழிப்படுத்தியது. |
| கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும் |
| வானுயர் நெடுவரை ஏறி ஆனாது |
| காண்கம் வம்மோ தோழி |
| | செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே |
(ஐங்-199) |
இது தோழி தலைவியைச் சொல்வழிப்படுத்தியது. பிறவும் இவ்வாறே கண்டுகொள்க. |
3) நன்னய முரைத்தல் என்பது : தமது ஆராத காதல் புலப்பட இதனைச் செய்தல் அறத்தாறாகும் எனத்தம் விருப்பினை இனிது எடுதியம்புதலாம். |
இஃது அகத்திணைக்குரியவாகப் பின்னர் ஓதப்பெறும் மெய்ப்பாட்டுப் பொருள்களுள் 'மடந்தப உரைத்தல்' என்னும் பொருளாம். ஏனையவற்றிற்கும் இவ்வாறே மெய்ப்பாட்டுப் பொருள் நிலைகளை அறிந்து கொள்க. மெய்ப்பாட்டுணர்வு தோன்றாமல் கூற்று நிகழ்தல் ஏலாதென அறிக. |
இதற்கு நச்சினார்க்கினியர் தனது கழிபெருங் காதலைக் கூறுதல் எனப் பொருளுரைப்பார். அஃதொன்றே ஆசிரியர் கருத்தாயின் நன்னயப் புரைத்தல் என வரைந்தோதியிருப் |