பார்மன். நயம் என்பது அன்பு, அறம், இனிமை, எளிமை, பண்பு முதலாயவற்றையுணர்த்தும் சொல்லாதலின் அவை எல்லாம் அடங்கக் கூறினார் என்க. |
| எ - டு : | யாயும் ஞாயும் யாரா கியரோ |
| எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் |
| யானும் நீயும் எவ்வழி யறிதும் |
| செம்புலப் பெயல்நீர் போல |
| அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே |
(குறு-40) |
இது தலைவன் தலைவியிடத்து நன்னய முரைத்தது. |
| பெருநன் றாற்றின் பேணாரும் உளரே |
| ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு |
| புலவி தீர அளிமதி இலைகவர்பு |
| ஆடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல் |
| மென்னடை மரையா துஞ்சும் |
| நன்மலை நாட நின்னல திலளே |
(குறு-115) |
இது தோழி தலைவனிடத்து நன்னய முரைத்தது. பிறவும் இவ்வாறே கண்டுகொள்க. |
4) நகைநனியுறாஅ அந்நிலையறிதல் என்பது : கூட்டத்திற்கு ஏதுவாகும் முறுவற் குறிப்பு மிக்குத் தோன்றாமல் அடக்கி நிற்கும் தலைவியது பெண்மையுணர்வைத் தலைவன் அறிந்து கோடலாம். உறாமை தலைவிக்கும் அறிதல் தலைவற்கும் கொள்க. இஃது உவகை என்னும் மெய்ப்பாட்டிற்குரிய நகுநய மறைத்தல் என்னும் பொருள் தோன்ற நிகழும் என்க. |
| எ - டு : | சொல்லின் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின் |
| திருமுக மிறைஞ்சி நாணுதி கதுமெனக் |
| காமங் கைம்மிகின் தாங்குதல் எளிதோ |
| கொடுங்கே ழிரும்புறம் நடுங்கக் குத்திப் |
| புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின் |
| தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் |
| கண்ணே கதவ வல்ல நண்ணார் |
| அரண்டலை மதில ராகவும் முரசுகொண்டு |
| ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன் |
| பெரும்பெயர்க் கூட லன்னநின் |
| கரும்புடைத் தோளும் உடையவா லணங்கே |
(நற்-39) |
என்பது தலைவன் தலைவி நிலையறிந்தது. |