| இன்னா என்றிர் ஆயின் |
| இனியவோ பெரும தமியோர்க்கு மனையே |
(குறு-124) |
இது தலைவி தலைவனிடத்துத் தன்நிலை கூறியது. பிறவும் இவ்வாறே கண்டுகொள்க. |
7) தெளிவகப்படுத்தல் என்பது. ஒருவர் கொண்ட ஐயமும் அச்சமும் வருத்தமும் நீங்கத் தம் பேரன்பினையும் பிரியின் ஆற்றாத கேண்மையினையும் சூளுறவொடு கூறித் தெளிவிக்கத் தெளிதலாம். |
| எ - டு : | மெல்லிய லரிவைநின் நல்லகம் புலம்ப |
| நிற்றுறந்து அமைகுவ னாயின் எற்றுறந்து |
| இரவலர் வாரா வைகல் |
| பலவா குகயான் செலவுறு தகவே. |
(குறு-137) |
இது தலைவன் தலைவியைத் தெளிவித்தல். பிறவும் இவ்வாறே கண்டுகொள்க. |
களவிற்குரிய தலைமக்களும் தோழி செவிலி பாங்கன் முதலானோரும் கூற்றாகவும் குறிப்பாகவும் பேசுவனவற்றையெல்லாம் இதன்கண் அடங்குமாறறிந்து அடக்கிக் கொள்க. |
| சூ. 103 : | மெய்தொட்டுப் பயிறல் பொய்பாராட்டல் |
| இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல் |
| நீடுநினைந் திரங்கல் கூடுத லுறுதல் |
| சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் |
| தீராத் தேற்றம் உளபடத் தொகைஇப் |
| பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும் |
| பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும் |
| நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் |
| குற்றங் காட்டிய வாயில் பெட்பினும் |
| பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும் |
| ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் |
| நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் |
| தோழியைக் குறையுறும் பகுதியும் தோழி |
| குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும் |
| தண்டா திரப்பினும் மற்றைய வழியும் |
| சொல்லவட் சார்தலின் புல்லிய வகையினும் |