தலைவன் நெருங்கியவழி இரு கைகளையும் எடுத்துக் கண்களைப் பொத்தி நிற்றலுமாம். இதனை நாணிக்கண் புதைத்தல் என்பர் கோவைநூலார். அங்ஙனம் கண் புதைத்து நிற்றலைப் பின்னர் மெய்ப்பாட்டியலுள் 'இருகையும் எடுத்தல்' என்னும் பொருளாகக் கூறப்படுதலைக் கண்டு கொள்க. |
எ - டு : | சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் |
(நற் - 39) |
இதன்கண் சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் என்றதனான் மெய்தொடற்கு முயன்றமையும், கூட லன்ன நின்கரும் புடைத்தோள் என்றதனான் பாராட்டியமையும் திருமுகம் இறைஞ்சி நாணுதி என்றதனான் இடையூறு கிளத்தியமையும் நிகழ்ந்தவாறு கண்டுகொள்க. |
5) நீடுநினைந்திரங்கல் என்பது : அவ்இடையூறுகளான் காலம் நீடுதலை எண்ணித் தலைவன் உளமெலித்துரைத்தலாம். நீடுதல் என்னும் தொழிற்பெயர் முதனிலையளவாய் நின்றது. |
6) கூடுதலுறுதல் என்பது : தலைவனது ஆற்றாமையைக் கண்ட தலைவி அளியளாய்க் கூட்டத்திற்கு உள்ளம் பொருந்தி நிற்றலாம். ஆண்டுச் சில சொல் நெஞ்சொடு கூறுதலும் கொள்க. கூடுதற்கு என நான்காவது விரித்துப் பொருள் காண்க. சொல்லிய நுகர்ச்சி வல்லே பெறுதல் என மேல் வருதலின் இஃது உடன்பட்ட அளவே யாமென அறிக. முன்னர் மெய்தீண்டுதற்கு இயைந்தவள் இதனாற் கூட்டத்திற்கு உடன்பட்டாள் என அறிக. |
7) சொல்லிய நுகர்ச்சி என்பது : ஐந்திணை மருங்கின் காமக் கூட்டம் (களவு-1) எனவும் காமப் புணர்ச்சி (செய்- 178) எனவும் இலக்கணமாகச் சொல்லப் பெற்ற காம இன்பத்தினை நுகரும் நுகர்ச்சியாம். அஃதாவது மெய்யுறுதலான் எய்தும் இன்பமாம். ஈண்டுச் சில சொல் நெஞ்சொடு நிகழ்த்தலுமாம். நுகர்ச்சியும் என்னும் எண்ணும்மை தொக்கு நின்றது. |
| எ - டு : | வேட்ட பொழுதின் அவையவை போலுமே |
| தோட்டார் கதுப்பினாள் தோள் |
(குறள்-1105) |
8) வல்லே பெற்றுழித்தீராத் தேற்றம் உளப்படத்தொகைஇப் பேராச் சிறப்பின் இரு நான்கு கிளவியும் என்றது : தெய்வப் புணர்ச்சியாய இன்ப நுகர்ச்சியைப் பாலதாணையாற் றலைமக்கள் விரைந்து பெற்றவழித் தலைவி இது மாயமோ மருட்கையோ கனவோ நினைவோ எனத்திகைத்து இனி |