களவியல்27

எவ்வாறாங்கொல்லோ  எனக்  கலங்குதலை ஓர்ந்துணர்ந்த தலைவன் தனது
தீராத காதன்மையை நயமுற  விளம்பி  எஞ்ஞான்றும்  பிரியேன், பிரியின்
தரியேன்  எனச்சூளுரை  கூறித்  தலைவியைத்  தேற்றித் தெளிவித்தலாகிய
கிளவி உளப்படத் தொகை பெற்றுத் திகழும் வேறுபடாத சிறப்பினையுடைய
அவ் எட்டுக் கிளவிகளும் என்றவாறு.
 

பயிறலும், பாராட்டலும், தழாஅலும்,  கிளத்தலும்,  இரங்கலும் உறுதலும்,
நுகர்ச்சியும், தேற்றமும் என எண்ணிக் கொள்க.
 

'பூவிடைப்   படினும்  யாண்டுகழிந்   தன்ன'   உணர்வுடையாராகலின்
காதலர்க்குப் பொழுது நீடுவதாகத்  தோன்றலன்றி  மெய்தொட்டுப்  பயிறல்
முதலாகிய நிகழ்ச்சிகள் விரைந்து  நிகழும்  என்பது அறிவித்தற்கு "வல்லே
பெற்றுழி"   என்றார். இவை எட்டும் பேராச்சிறப்பின  எனவே  இவற்றைச்
சார்ந்து   நிகழும்  தலைவியைப்  புகழ்தலும்,  தெய்வத்தை   வாழ்த்தலும்,
அணிந்தவை திருத்தலும், இடமணித்தென்றலும்,  ஆயத்துய்த்தலும்,  அவள்
செலவு கண்டுரைத்தலும்  பிறவும் இயற்கைப் புணர்ச்சிக்குரிய கிளவிகளாகக்
கொள்ளப் பெறும்.
 

எ - டு :

கொங்குதேர் வாழ்க்கை.... அறியும் பூவே
(குறு - 2)
 

இது புணர்ச்சிக்குப்பின் தன்காதன்மை தோன்ற நலம் பாராட்டியது.
 

அம்மெல் லோதி விம்முற் றழுங்கல்

எம்மலை வாழ்நர் இரும்புனம் படுக்கிய

அரந்தின் நவியறுத் துறுத்த சாந்தம்நும்

பரந்தேந் தல்குற் றிருந்திழை யுதவும்

பண்பிற் றென்ப வண்மை யதனாற்

பல்கால் வந்துநம் பருவரல் தீர

அல்கலும் பொருந்துவ மாகலின்

ஒல்கா வாழ்க்கைத் தாகுமென் னுயிரே

(நச்சர்-மேற்)
 

இஃது   இடம்   அணித்தெனக்   கூறித்தெளித்தது.   பிறவும்  சான்றோர்
இலக்கியங்களுட் கண்டுகொள்க.
 

இயற்கைப்  புணர்ச்சி பாலதாணையான் நிகழ்வதாகலின் அஃது ஒன்றாக
ஒருமுறையே    நிகழும்   என்பதறிவித்தற்கு    இவற்றைப்     பிரித்துத்
தொகைகொடுத்துக் கூறினார் என அறிக.
 

9) பெற்றவழி மகிழ்ச்சியும் என்றது; தலைவியைத்  தேற்றி ஆய்த்துய்த்து
நீங்கிய தலைவன்-பிற்றை நாளும்