நான்காக வகுத்து அவற்றுள் பாங்கற் கூட்டமும் ஒன்று என நூலோர் கூறியுள்ளமையான் நச்சினார்க்கினியர் கருத்து நூலொடு பொருந்தாமையறியலாம். |
| எ - டு : | பண்டையை அல்லைநீ இன்று பரிவொன்று |
| கொண்ட மனத்தை எனவுணர்வல் - கண்டாயால் |
| நின்னுற்ற தெல்லாம் அறிய வுரைத்தியாற் |
| பின்னுற்ற நண்பினாய் பேர்ந்து |
(நச்-மேற்) |
இதுபாங்கன் தலைவனை உற்றதுவினாவியது. |
| எலுவ சிறஅர் ஏமுறு நண்ப |
| புலவ தோழ கேளா யத்தை |
| மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் |
| பசுவெண் டிங்கள் தோன்றி யாங்குக் |
| கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் |
| புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே |
(குறு-129) |
இது தலைவன் உற்றது உரைத்தது. |
| தேரோன் தெறுகதிர் மழுங்கினும் திங்கள் |
| தீரா வெம்மையொடு திசைநடுக் குறினும் |
| பெயராப் பெற்றியிற் றிரியாச் சீர்சால் |
| குலத்திற் றிரியாக் கொள்கையும் கொள்கையொடு |
| நலத்திற் றிரியா நாட்டமும் உடையோய் |
| கண்டதன ளவையிற் கலங்குதி எனின்இம் |
| மண்டிணி கிடக்கை மாநிலம் |
| உண்டெனக் கருதி உணரலன் யானே |
(நச்-மேற்) |
இது பாங்கன் கழறியுரைத்தது. |
| இடிக்குங் கேளிர் நுங்குறை யாக |
| நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல |
| ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில் |
| கையில் ஊமன் கண்ணிற் காக்கும் |
| வெண்ணெய் உணங்கல் போலப் |
| பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே |
(குறு-58) |
இது கழறிய பாங்கற்குத் தலைவன் ஆற்றாமை உரைத்தது. |
| பங்கயமோ துங்கப் பனிதங்கு மால்வரையோ |
| அங்கண் விசும்போ அலைகடலோ-எங்கோவிச் |
| செவ்வண்ண மால்வரையே போலும் திருமேனி |
| இவ்வண்ணம் செய்தாட் கிடம் |
| (நச்-மேற்) |