| எ - டு : | அருவி யார்க்கும் பெருவரை நண்ணிக் |
| கன்றுகால் யாத்த மன்றப் பலவின் |
| வேர்க்கொண்டு தூங்கும் கொழுஞ்சுளைப் பெரும்பழம் |
| குழவிச் சேதா மாந்தி யயலது |
| வேய்பயில் இறும்பின் ஆம்அறல் பருகும் |
| பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச் |
| சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லெனக் |
| கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த |
| செங்கே ழாடிய செழுங்குரற் சிறுதினைக் |
| கொய்புனங் காவலும் நுமதோ? |
| கோடேந் தல்குல் நீடோ ளீரே |
(நற்-213) |
இது ஊரும், செய்தியும் பற்றி வினாவியது. |
| செறிகுரல் ஏனற் சிறுகிளி காப்பீர் |
| அறிகுவேன் நும்மை வினாஅய்-அறிபறவை |
| அன்ன நிகர்க்குஞ்சீர் ஆடமை மென்றோளிர் |
| என்ன பெயரிரோ நீர் |
(நச்-மேற்) |
இது பெயர் வினாவியது. |
| நறைபரந்த சாந்தம் அறவெறிந்து நாளால் |
| துறைஎதிர்ந்து வித்தியவூழ் ஏனல் - பிறைஎதிர்ந்த |
| தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ? |
| ஏமரை போந்தன வீண்டு |
(திணைமாலை-நூ.ஐ-1) |
இது கெடுதி வினாயது. பிறவும் தொகையுள்ளும் பிற சான்றோர் இலக்கியத்தும் கண்டு கொள்க. |
15) தோழி குறையவட்சார்த்தி மெய்யுறக் கூறலும் என்பது=தலைவன்தான் குறையுறுதல் தலைவியிடத்ததாய் இருந்தது எனத் தோழி தலைவியைச் சார்த்தி (ஓர்ந்து) உண்மையென உணருமாறு கூறுதலும் என்றவாறு. |
அஃதாவது இருவரும் உள்வழிக் குறிப்பாகக் கூறிய தலைவன் தோழி தனிந்திருந்த வழிக் கூறுங்கால் தான் குறையுறுதல் தலைவியை நோக்கியதாகும் என அவள் உணருமாறு கூறும் என்றவாறு. 'மெய்யுற' என்றது தலைவன் கூறுவன உண்மை எனத் தோழி உள்ளத்திற் பொருந்த என்றவாறு. |
| எ - டு : | பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித் |
| தண்கமழ் புதுமலர் நாறும் ஓண்டொடி |
| ஐதமைந் தகன்ற அல்குல் |
| கொய்தளிர் மேனி ! கூறுமதி தவறே |
(ஐங்-176) |