இவ் ஐந்து கிளவிகளும் பாங்கி ஏதுவாகத் தலைவியைக் கூடும் கூட்டத்திற்குரியவாக அமைதலின் இவற்றை யாழோர் கூட்டமாகிய ஐந்திணைப் பகுதியாம் எனக் கூறுவர். |
18) சொல்லவட் சார்த்தலின் புல்லிய வகையினும் என்பது : தலைவன் தான் இரந்து கூறுவனவற்றைத் தோழி தலைவியைச் சார்த்திமொழிதலின் புல்லிய நெஞ்சத்தனாகிய வகையினும் என்றவாறு. |
என்றது : அவளறிவுறுத்துப் பின்வா என்றலும், பேதைமையூட்டலும் முன்னுறுபுணர்ச்சி முறைநிறுத்துரைத்தலும் பிறவுமாக நீயே தலைவியிடத்துச் சென்று நின்குறை முடித்துக் கொள்க எனத்தோழி கூறியவிடத்துச் சுமந்தான் தன்தோளின் நீக்கிய முடவன் போலப் புல்லிய நெஞ்சத்தனாய்க் கலங்கிக் கூற்று நிகழ்த்தும் என்றவாறு. ஆண்டுச் செய்வதறியாது கலங்கலின் புல்லியவகையினும் என்றார். புல்லியவகை = புற்கென்ற வகை எனப் பண்பின் மேல் நின்றது. |
இதுமுதலாக மடன்மா கூறுதல் இறுதியாக உள்ள நான்கு கிளவிகளும் ஐந்திணைக்கண் நிகழும் பெருந்திணைப் பகுதியாம் என மேற்கூறுதலின் இதற்கு இதுவே பொருளாதல் தெளியப்படும். |
| எ - டு : | நல்லுரை இகந்து புல்லுரை தாஅய் |
| பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல |
| உள்ளந் தாங்கா வெள்ளம் நீந்தி |
| அரிதவா வுற்றனை நெஞ்சே! நன்றும் |
| பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு |
| மகவுடை மந்தி போல |
| அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே |
(குறு-29) |
19) அறிந்தோளயர்ப்பின் அவ்வழிமருங்கிற் கேடும் பீடும் கூறலும் என்றது : தலைவன் வரையாது களவுநீட்டித்தலைத் தவிர்க்க வேண்டித் தலைவி இற்செறிக்கப் பெற்றாள் எனவும் காவற்குள்ளாயினாள் எனவும் நின் குறையை உணர்த்தற்கு அரியளாயினாள் எனவும் தோழி சோர்வுற்றுரைப் பின் அவ்விடத்துத் தலைவி தன்னைக் காணாமையான் எய்தும் துன்பினையும் தன்னை இன்றியமையாத அவள் காதற்சிறப்பினையும் கூறுதலும் என்றவாறு. |
| எ - டு : | தண்டழை செரீஇயும் தண்ணென வுயிர்த்தும் |
| கண்கலுழ் முத்தம் கதிர்முலை யுறைத்தும் |