மடன்மா எனச் சிறப்புப் பற்றிக் கூறினார். ஏனை வரைபாய்வல் எனக் கூறும் இடனும் உண்டெனக் கொள்க. "இடனுமாருண்டே" என்றதனான் இக் கைகோளின்கண் பிறவாறுவரும் தலைவன் கூற்றுக்களையெல்லாம் கூறப்பட்ட கிளவிகளுள் அடங்குமாறறிந்து அடக்கிக் கொள்க. |
| எ - டு : | மாவென மடலும் ஊர்ப பூவெனக் |
| குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப |
| மறுகின் ஆர்க்கவும் படுப |
| பிறிதும் ஆகுப காமங்காழ் கொளினே |
(குறு-17) |
எனவரும். |
| சூ. 104 : | பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும் |
| அன்புற்று நகினும் அவட்பெற்று மலியினும் |
| ஆற்றிடை யுறுதலும் அவ்வினைக் கியல்பே |
(12) |
க - து : | களவின்கண் நிகழும் நால்வகைப் புணர்ச்சிக்கும் பொதுவாக மேற்கூறிய தலைமகனுக்குரிய கிளவிகளைச் சார்ந்து பாங்கற் கூட்டம், தோழியிற் புணர்வு ஆகிய இரண்டற்கும் சிறப்பு வகையான் நிகழும் கூற்றுக்கள் இவ் ஏதுக்களான் நிகழும் என அவற்றைத் தொகுத்துணர்த்துகின்றது. |
பொருள் :1) பண்பிற் பெயர்ப்பினும் என்பது : பாங்கன் தலைவற்கு உற்றது உணர்ந்த வழித் தலைவனது பண்பு முதலியவற்றை எடுத்துக் கூறி மாற்றக் கருதியவிடத்தும், இரந்து பின்னின்ற தலைவனை நோக்கித் தோழி நின்னாற் கருதப்பட்டாள் பேதையங் குறுமகள், இத்தன்மையளாகிய செல்வ மகள் எனக் கூறி மாற்றக் கருதியவிடத்தும் தலைவன் கூற்று நிகழ்த்தும் என்றவாறு. |
இது பாங்கற் கூட்டத்து நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் என்னும் கிளவியையும் தோழியிற் கூட்டத்துத் தண்டாதிருப்பினும் என்னுங் கிளவியையும் சாரும். |
| எ - டு : | கவவுக்கடுங் குரையள் காமர் வனப்பினள் |
| குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே |
| யாங்கு மறந்தமைகோ யானே ஞாங்கர்க் |
| கடுஞ்சுரை நல்லான் நடுங்குதலைக் குழவி |
| தாய்காண் விருப்பின் அன்ன |
| சாஅய் நோக்கினள் மாஅ யோளே. |
(குறுந்-132) |
இது பாங்கன் பண்பிற் பெயர்த்தவழித் தலைவன் கூறியது. |